சைபுல் இஸ்லாம் (இதழ்)

சைபுல் இசுலாம் இந்தியா வேலூரிலிருந்து 1910ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ், இசுலாமிய இதழ். ஆரம்பத்தில் வார இதழாக தொடங்கப்பட்டு பின்பு சென்னையிலிருந்து நாளிதழாக வெளியிடப்பட்டது. நாளிதழாக வெளிவந்த இவ்விதழ் சிறிதுகாலத்தில் வாரம் இருமுறை என்றும், வார இதழ் என்றும் மாறி 1947இல் நின்றுபோனது.

ஆசிரியர் தொகு

  • மௌலவி அகமது சையித்து சாகிப்பு

சில கருத்துகள் தொகு

முசுலிம்களின் முன்னேற்றத்தைக் கருதியே சென்னை சைபுல் இசுலாம் தினசரியாகத் தோன்றியது. தமிழ் மக்கள் அப்புதின பத்திரிகையை ஆதரிக்காது வாளாவிருந்த நிமித்தமன்றோ இன்று அப்பத்திரிகை வாரமிரு முறை வெளிவருகிறது.

    • தாச்சுல் இசுலாம் (ஈரோடு), ஆகத்து 1925

தமிழ் முசுலிம்களிடையே பத்திரிகை படிப்பதில் ஆர்வத்தை உண்டாக்கிய பெருமையும் தொடர்ந்து வெளியிடுவதில் ஏற்பட்ட இடர்பாடுகளை எல்லாம் சகித்துக்கொண்டு அதிக காலம் போராடிய தியாகமும் மௌலவி அகமது சையித்து சாகிப்பு அவர்களுக்கே உரியது. தமிழ் முசுலிம்களின் பத்திரிகைகளின் வரலாற்றில் செயற்கரிய சாதனை செய்துகாட்டிய முதல்வராக அவர் திகழ்கிறார்.

    • நாவலர் அ. மு. இயூசுப்பு

புத்தகநிலையம் தொகு

சைபுல் இசுலாம் புத்தகநிலையம் எனும் பெயரில் நூல் வெளியீட்டகம் ஒன்றும் இப்பத்திரிகையால் நடத்தப்பட்டுள்ளது. சைபுல் இசுலாம் ஆசிரியர், அகமது சையித்து சாகிப்பு எழுதிய "பரதா பிரமாணங்கள்" (1936) நூல் உட்பட பல நூல்களை இந்த வெளியீட்டகம் முதலிய வெளியிட்டுள்ளது.

ஆதாரம் தொகு

சாமி அ.மா. தமிழில் இசுலாமிய இதழ்கள், நவமணி பதிப்பகம் சென்னை. 600 004

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைபுல்_இஸ்லாம்_(இதழ்)&oldid=3170583" இலிருந்து மீள்விக்கப்பட்டது