சையது ஹசன் இமாம் (நடிகர்)

வங்காளாதேசத்தின் நடிகர்

சையத் ஹசன் இமாம் (Syed Hasan Imam)(பிறப்பு: ஜூலை 27, 1935) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஓர் நடிகரும், திரைப்பட இயக்குனரும், தொலைக்காட்சி இயக்குனரும், கலாச்சார ஆளுமையுமாவார்.இவர் "ஏகுஷே பதக்கம்" (1999), "சுதந்திர தின விருது" (2016), "வாழ்நாள் சாதனையாளருக்கான வங்காளதேசத்தின் தேசியத் திரைப்பட விருது" (2014) ஆகியவற்றைப் பெற்றுள்ளார். 1971இல் வங்காளதேச விடுதலைப் போரின்போது சுவாதின் பங்களா பீட்டர் கேந்திரத்தின் ஒரு பகுதியாக இருந்தார். இவர் 2010இல் பங்களா அகாதமியின் கௌரவ சகாவானார்.[2]

சையத் ஹசன் இமாம்
தாய்மொழியில் பெயர்সৈয়দ হাসান ইমাম
பிறப்பு27 சூலை 1935 (1935-07-27) (அகவை 88)
பர்த்வான், பெங்கால் மாகாணம், பிரித்தானிய இந்தியா
தேசியம்வங்கதேசத்தவர்
பணிநடிகர், திரைப்பட இயக்குனர், தொலைக்காட்சி இயக்குனர்
வாழ்க்கைத்
துணை
நடிகை லைலா (தி. 1965)
[1]
விருதுகள்ஏகுஷே பதக்கம்
சுதந்திர தின விருது

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இமாமின் தந்தை இவருக்கு இரண்டு வயதாக இருந்தபோதே இறந்து போனார். பர்த்வான் நகரப் பள்ளியில் தனது மெட்ரிகுலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் பர்த்வான் ராஜ் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[3] இவர் மேற்கு வங்க பள்ளி அளவிலான அணிகளில் துடுப்பாட்டம், கால்பந்து விளையாட்டு ஆகிய இரண்டிலும் விளையாடினார்.[4] அகில இந்திய அளவில் நடைபெற்ற ரவீந்திர சங்கீத விழாவிலும் முதல் பரிசினை வென்றார். மேலும், இவர் பாக்கித்தானின் தேசிய வங்கியிலும் பணியாற்றினார்.

தொழில் தொகு

தர்மபத் (1961) என்ற படத்துடன் இமாம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். ராஜா எலோ ஷோஹோரி (1964), ஷீத் பிகல் (1964), ஜனஜனி (1965), உஜாலா (1966), ககோஜர் நௌகா (1966), அனார்கோலி, சரேங் பௌ (1978), குட்டி (1980) போன்ற படங்களில் நடித்தார்.

நூருல் மோமன் எழுதி இயக்கிய "ஓந்தோகார்த்தை அலோ" என்ற வங்காளாதேசத் தொலைக்காட்சியின் இரண்டாவது நாடகத்தில் முதலில் அறிமுகமானார். இலாலன் பாகிர் (1972), இலால் ஷோபுஜர் பாலா (1981), ஒபிச்சார் ஆகிய படங்களை இவர் இயக்கியும் உள்ளார்.[5]

இவர், வங்காளதேசத்தின் திரைப்படம் மற்றும் நாடக ஷில்போ சமிதியின் இணை நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இமாம் 1965இல் லைலா என்பவரை மணந்தார்.[6][7]

மேற்கோள்கள் தொகு

  1. "A tale of two sisters". The Daily Star. 2015-02-27. http://www.thedailystar.net/arts-entertainment/interview/tale-two-sisters-4095. பார்த்த நாள்: 2017-07-09. 
  2. পুরস্কারপ্রাপ্তদের তালিকা [Winners list] (in Bengali). Bangla Academy. Archived from the original on 6 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 31 July 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Childhood memories-Syed Hasan Imam: The errant school boy". The Daily Star. 2010-05-30. https://www.thedailystar.net/news-detail-140560. பார்த்த நாள்: 2018-09-15. "Childhood memories-Syed Hasan Imam: The errant school boy".
  4. "53 years of unwavering comradeship". The Daily Star. 2018-09-15. https://www.thedailystar.net/showbiz/cover-story/news/hasan-imam-and-laila-hasan-53-years-unwavering-comradeship-1633963. பார்த்த நாள்: 2018-09-15. 
  5. "Syed Hasan Imam to get Lifetime Achievement". The Daily Star. 2016-01-20. http://www.thedailystar.net/arts-entertainment/event/syed-hasan-imam-get-lifetime-achievement-204280. பார்த்த நாள்: 2016-01-20. "Syed Hasan Imam to get Lifetime Achievement".
  6. 6.0 6.1 "53 years of unwavering comradeship". The Daily Star. 2018-09-15. https://www.thedailystar.net/showbiz/cover-story/news/hasan-imam-and-laila-hasan-53-years-unwavering-comradeship-1633963. பார்த்த நாள்: 2018-09-15. "53 years of unwavering comradeship".
  7. "Syed Hasan Imam and Laila Hasan honoured". The Daily Star. 2017-05-04. https://www.thedailystar.net/arts-entertainment/syed-hasan-imam-and-laila-hasan-honoured-1399993. பார்த்த நாள்: 2018-10-14. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சையது_ஹசன்_இமாம்_(நடிகர்)&oldid=3908858" இலிருந்து மீள்விக்கப்பட்டது