சையாதியா சைசாண்டியா
Cyathea gigantea | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம்
|
பிரிவு: | டெரிடோபைட்டா
|
வகுப்பு: | டெரிடாப்சிடா]
|
வரிசை: | சையாத்தியேல்
|
குடும்பம்: | சையாத்தியேசி
|
பேரினம்: | சையாத்தியே
|
துணைப்பேரினம்: | சையாத்தியே
|
பிரிவு: | சையாத்தியே
|
இனம்: | சைசாண்டியா
|
இருசொற் பெயரீடு | |
சையாதியா சைசாண்டியா (Wallich ex W. J. Hooker) Holttum, 1935 | |
வேறு பெயர்கள் | |
|
சையாதியா சைசாண்டியா (Cyathea gigantea) என்பது பெரணி மர வகையைச் சார்ந்தது. இது வடகிழக்கு இந்தியா முதல் தென்னிந்தியா, நேபாளம், மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், மலாய் தீபகற்பம், மத்திய சுமத்திரா மற்றும் மேற்கு ஜாவா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
இத்தாவரமானது சையாத்தியா கிளாபரா போன்றே காணப்படுவதாகத் தாவரவியலாளர்கள் லாா்ச் மற்றும் பிராக்கின்ஸ் தொிவிக்கின்றனா். மேலும் சாயத்தியா போடோபில்லா மற்றும் சையாத்தியா சய்டியுபியா தாவரங்களோடு ஒரு குழுவாகப் பண்புகளில் ஒத்துப் போவதாகவும், மேற்காணும் பெரணி வகைகளுக்கிடையேயான தொடா்பினைத் தொிந்து கொள்ள மேலும் ஆராய்ச்சிகள் தொடரப்பட வேண்டும் என்று இவர்கள் தெரிவிக்கின்றனர். சைசாண்டியா என்னும் பதம் மிகப்பொிய ஓலை போன்ற இலை அமைப்பை குறிப்பதாகக் கொள்ளலாம்.
600-1000 மீட்டா் வரை உயரத்தில் ஈரமான வெளிகளில் வளரக் கூடியது. தண்டுப் பகுதியானது நேராகவும் 5 மீட்டா் அல்லது அதற்கு மேலும் உயரமாக வளரக் கூடிய தன்மை கொண்டது. இலைப்பகுதி இரண்டு அடுக்கு மற்றும் மூவடுக்கு முறையில் காணப்படுகிறது. இலைக்காம்புப்பகுதி நீளமாகவும் செதில்கள் உதிா்ந்த பிறகு அடா் கறுப்பு நிறமாகவும் கடினமாகவும் தென்படுகிறது. செதில்கள் அடா்ந்த பழுப்பு நிறத்தில் ஒளி ஊடுருவும் தன்மையானதாகவும், குறுகிய நிறமிழந்த நுனிகளை உடையதாகவும் உள்ளது. வட்ட வடிவமான சோரைகைள கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- Braggins, John E. & Large, Mark F. 2004. Tree Ferns. Timber Press, Inc., p. 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88192-630-2
- The International Plant Names Index: Cyathea gigantea