சைராட் (திரைப்படம்)

சைராட் (மராத்திː सैराट, Wild) 2016 ஆம் ஆண்டு வெளிவந்த மராத்தி மொழி காதல் திரைப்படம் ஆகும். இப்படத்தின் இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, மற்றும் முதன்மை நடிகர்கள் ஆகாஷ் - ரிங்கு ஆகியோர். இப்படத்தின் தயாரிப்பாளார்கள் ஜீ ஸ்டுடியோ மற்றும் எஸெல் விசன் நிறுவனத்தினர். 2016 ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி இசையமைப்பாளார்கள் அஜய்-அதுல் இப்படத்தின் பாடல்களை வெளியிட்டார்கள். ஆனால் இப்படம் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி திரையிடப்பட்டது. இதற்கு முன்னர் வெளிவந்த மராத்தி படமான நட்சாம்ராட் படத்தைவிட வசூலில் கொடிகட்டிப்பறந்தது.[3][4] மராத்தி பட வரலாற்றில் இப்படம் 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இச்சாதனையின் காரணமாக இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட உள்ளது.[5] இதன் மறுபதிப்பிற்கான தென்னிந்திய நான்கு மொழிகளுக்கான உரிமையை நடிகர் வெங்கடேஷ் வாங்கியுள்ளார்.[6][7][8] அதேபோல் உலகளவில் 100 கோடி
(US$13.11 மில்லியன்)
வசூல் சாதனை செய்த முதல் மராத்தி படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.[9][10]

சைராட்
Sairat
இயக்கம்நாகராஜ் மஞ்சுளே
தயாரிப்புநாகராஜ் மஞ்சுளே,
நிதின் கேனி,
நிகில் ஷானி
இசைஅஜய் அதுல்
நடிப்புரிங்கு ராச்குரு
ஆகாஸ் தோசார்
ஒளிப்பதிவுசுதாகர்
படத்தொகுப்புகுதுப் இமான்தர்
கலையகம்எஸ்எல் விசன் தயாரிப்பு, மற்றும் ஆட்பட் தயாரிப்பு, ஜீ ஸ்டூடியோ
வெளியீடுஏப்ரல் 29, 2016 (2016-04-29)
ஓட்டம்174 Minutes
நாடுஇந்தியா
மொழிமராத்தி
ஆக்கச்செலவு4 கோடி
(US$5,24,400)
[1]
மொத்த வருவாய்மதிப்பீடு. 100 கோடி
(US$13.11 மில்லியன்)
(Worldwide gross)[2]

கதைக்களம்தொகு

ஒரு கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில், மற்றும் கீழ் இனமாகப் பிறந்த கதாநாயகன் (பர்சா) அதே ஊரில் பெரிய பணக்கார, உயர் இனப் பெண்ணைக் (ஆர்சி) காதலிக்கிறான். பிரசாந் காளே படிப்பில் கெட்டிக்காரனாகவும், துடுப்பாட்டத்தில் சிறந்தவனாகவும் இருக்கிறான். ஆர்ச்சி டிராக்ட்டர் ஓட்டுவது, புல்லட் ஓட்டுவதுமாக சுட்டிப்பெண்ணாகவும் தைரியமான பெண்ணாகவும் இருக்கிறார். இருவரும் அர்சனா பட்டேலின் கல்லூரியிலேயே ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். இருவரிடையேயும் காதல் அரும்புகிறது. அக்காதல் அர்ச்சனாவின் அண்ணன் பிறந்தநாள் கொண்டாத்தின் போது அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது. பிரசாந்த் காளே கல்லூரியிலிருந்து துரத்தப்படுவதுடன் ஊரைவிட்டே ஒதுக்கிவைக்கப்படுகிறான். அர்ச்சானா பட்டேலின் அப்பா அரசியல்வாதிகளின் உதவியுடன் வேறு ஒருவருடன் அர்ச்சனாவின் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். அர்ச்சனா பட்டேல் வீட்டைவிட்டு வெளியில்வந்து பிரசாந்த் காளேயுடன் வெளியூருக்கு செல்லமுற்படுகிறாள். அப்போது அவர்கள் காவலர்களிடம் அகப்பட்டு மறுபடியும் அப்பாவிடம் சேர்ப்பிக்கப்படுகிறாள். அதோடு பிரசாந்த் காளேயின் குடும்பத்தை காவலர்களில் சிறையிலிருந்து விடுவிக்கிறாள். தன் வீட்டுக்கு செல்லும்போது அர்ச்சனாவின் அப்பாவின் அடியாட்கள் பிரசாந் காளே, மற்றும் அவரின் நண்பர்களைத் தாக்குவதைப்பார்க்கிறாள். வாகனத்தைவிட்டு வலுக்கட்டாயமாக இறங்கி தாக்கவிடாமல் தடுத்து கீழே கிடந்த துப்பாக்கியின் உதவியுடன் இருவரும் தப்பித்து கைதராபாத்த் சென்றுவிடுகிறார்கள்.

அங்கு ஒரு பெண் இருவருக்கும் அடைக்களம் கொடுத்து பிரசாந்திற்க்கு தனது கடையிலும் அர்ச்சனாவிற்கு தொழிற்சாலையிலும் வேலையும் வாங்கிக்கொடுக்கிறார். தனியாக அர்ச்சனா பட்டேல் திரைப்படம் பார்க்க சென்றதால் பிரசாந்த் காளே சந்தேகப்படுகிறான். இருவருக்குமிடையான சண்டையில் புகைவண்டியில் தனது ஊருக்கு புறப்பட்டுச்செல்கிறாள் அர்ச்சனா பட்டேல். எதைச்சையாக ஒரு புகைவண்டி நிலையத்தில் தூங்கும் ஒரு நபரையும், கண்தெரியாத வயது முதிர்ந்த கணவனுக்காக ஒரு பெண் பிச்சை கேட்பதைப் பார்த்து பிரசாந்த் காளேயின் நினைவு வர அர்ச்சன்னா பட்டேல் பிரசாந்திடமே சென்றுவிடுகிறாள். இருவருக்கும் கல்யாணம் முடிந்து ஒரு பையன் பிறக்கிறான்.

குடிசையில் வாழ்ந்த இவர்கள் தனிவீட்டுக்கு குடிபெயற்ந்ததுடன் அவர்களுக்கென தனியாக புது அடுக்குமாடி வீடே வாங்கும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள். பக்கத்து வீட்டுப்பெண் அவர்களின் பிள்ளையை வெளியில் கூட்டிச்செல்லுகிறார். இதற்கிடையில் அர்ச்சனாவின் அண்ணன் மற்றும் சொந்தங்கள் நான்குபேர் இவர்களைப் பார்க்க பரிசுப்பொருட்களுடன் வருகிறார்கள். அவர்களை உபசரிக்கும் அர்ச்சனா பிரசாந்த் காளே வந்தவுடம் தேனீர் கொடுத்து அவர்களுக்கு கொடுக்கச்சொல்லுகிறாள். பிரசாந்த் தேநீர் கொடுத்துவிட்டு வந்தவுடன் அர்ச்சனா பட்டேல் கணவனை அன்பாக அணைத்துக்கொள்கிறார். குழந்தையை வெளியில் கூட்டிச்சென்ற பெண் பிரசாந்த் விட்டின் முன் விடுகிறாள். குழந்தை விட்டிற்க்குள் செல்லுகிறது. தன் அப்பா, அம்மா இருவரும் கழுத்து ஆணவக்கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அழுகிறது. அக்குழந்தை அனாதையாக வீட்டிலிருந்து வெளியில் வருகிறது. படம் அமைதியாகிறது.

மேலும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைராட்_(திரைப்படம்)&oldid=2759656" இருந்து மீள்விக்கப்பட்டது