சைலோட்டம் நூடம்

சைலோட்டம் நூடம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. nudum
இருசொற் பெயரீடு
Psilotum nudum
(L) P.Beauv.
வேறு பெயர்கள்  [1]
  • Lycopodium nudum L.
சைலோட்டம் நூடம் தாவரம் சிட்னி ஒப்ரோ மாளிகையில், ஆத்திரேலியா

சைலோட்டம் நூடம் ( Psilotum nudum ) என்பது ஒரு பன்னம் தாவரமாகும். இது வெப்ப மண்டல ஆப்பிரிக்கா, வெப்பமண்டல நடு அமெரிக்கா, வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல வட அமெரிக்கா, தென் அமெரிக்கா,[1] வெப்பமண்டல ஆசியா, ஆத்திரேலியா, ஹவாய், தெற்கு சப்பான், லோர்ட் ஹாவ் தீவு, நியூசிலாந்து, தென்மேற்கு ஐரோப்பாவின் ஒரு சில தனிப்பட்ட பகுதிகளில் ( "லாஸ் வெப்பமண்டலபகுதிகளான, ஸ்பெயின் , காடிஸ் மாகாணம்) காணப்படுகிறன.[2] [3]

தாவரங்களின் பரிணாம வளர்ச்சியின்போது தாவரங்களுக்குச் சைலம், புளோயம் குழல்கள் உருவானது என்பது ஒரு முதன்மையான நிகழ்வு. அவ்வாறு முதன்முதலில் சைலம், புளோயம் குழல்கள் உருவான தாவரங்களில் 40 கோடி ஆண்டுகளுக்கும் முந்தைய சைலோட்டம் நூடம் தாவர வகையின் புதைபடிவங்கள் கிடைத்துள்ளன. நீரிலிருந்து நிலத்துக்கு வந்த தாவரங்களில் நிலத்தில் நிமிர்ந்து வளர்ந்த முதல் தாவரம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. இவ்வாறு 40 கோடி ஆண்டுகளுக்கும் முன்பே பூமியில் வேரூன்றிய தாவர இனங்களில் சில இன்னும் உள்ளன. அவற்றில் ஒன்றே பெரணி வகை தாவரத்தைச் சேர்ந்த இந்த சைலோட்டம் நூடம் ஆகும்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Psilotum nudum". Flora of North America.
  2. "Psilotum nudum" (PDF). Atlas y Libro Rojo de la Flora Vascular Amenazada de España (in Spanish).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. Fairley, Alan; Moore, Philip (1989). Native plants of the Sydney District (1st ). Kangaroo Press. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-86417-261-3. 
  4. "ஏற்காட்டின் பசுமை அற்புதங்கள்". தி இந்து (தமிழ்). 5 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைலோட்டம்_நூடம்&oldid=3842991" இலிருந்து மீள்விக்கப்பட்டது