சொக்ட்டோ
சொக்ட்டோ (Choctaw) எனப்படுவோர், தொடக்கத்தில், மிசிசிப்பி, அலபாமா, லூசியானா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்த தொல்குடி அமெரிக்க இனக்குழு ஆகும். இவர்கள் பேசும் மொழி முஸ்கோஜிய மொழிக்குழுவைச் சேர்ந்தது. இவர்கள், மிசிசிப்பி ஆற்றுப் பள்ளத்தாக்கு முழுவதும் பரவியிருந்த மிசிசிப்பிப் பண்பாட்டின் ஒரு பகுதியினர் ஆவர். எசுப்பானியப் பயணிகள் இவர்களை முதன்முதலாகக் கண்டதாக நம்பப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் இவர்களுக்கு அயலவர்களாக இருந்த ஐரோப்பிய அமெரிக்கக் குடியேற்றக்காரரின் பண்பாடு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் பலவற்றை இவர்கள் பின்பற்றி வந்தனர். இதனால் அக்காலத்தில் சொக்ட்டோக்கள், ஐரோப்பிய அமெரிக்கர்களால், ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகளுள் ஒரு பழங்குடியாகக் கொள்ளப்பட்டனர். தெற்குப் பகுதியிலும் சில் சொக்ட்டோக் குழுக்கள் இருந்தாலும், ஒக்லஹோமா சொக்ட்டோ தேசமும், மிசிசிப்பி சொக்ட்டோ இந்தியக் குழுவுமே முதன்மையான சொக்ட்டோ சமூகங்கள் ஆகும்.
தலைவர்/ஜெனரல் புஷ்மத்தாஹா, 1824, சிமித்சோனிய அமெரிக்க ஓவிய அருங்காட்சியகம் ஒரு சொக்ட்டோப் பெண், 1850, பி. ரோமர் என்பவரால் வரையப்பட்டது. | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
160,000 [1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
ஐக்கிய அமெரிக்கா (ஒக்லஹோமா, கலிபோர்னியா, மிசிசிப்பி, லூசியானா, அலபாமா) | |
மொழி(கள்) | |
ஆங்கிலம், சொக்ட்டோ | |
சமயங்கள் | |
புரட்டஸ்தாந்தம், மரபுவழி நம்பிக்கைகள் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
சிக்காசோ, ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் பிற தொல்குடி அமெரிக்கக் குழுக்கள் |
ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜாக்சன், சொக்ட்டோக்களில் வெளியேற்றத்தை இந்தியர் அகற்றல் செயற்பாடுகளுக்கு ஒரு மாதிரியாகக் கொண்டார். முதலாவது கண்ணீர்த் தடங்கள் பயணத்தை மேற்கொண்டவர்கள் சொக்ட்டோக்களே ஆவர். 1831 ஆம் ஆண்டில், ஆடும் முயல் வெளி ஒப்பந்தம் (Treaty of Dancing Rabbit Creek) எனப்படும், சொக்டோக்களை வெளியேற்றும் ஒப்பந்தத்தின்படி, ஒக்லஹோமாவுக்குச் சென்றவர்கள் போக, புதிதாக உருவான மிசிசிப்பி மாநிலத்திலேயே சில சொக்ட்டோக்கள் தங்கிவிட்டனர். இவர்களே முதன்முதலாக ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை பெற்ற முக்கியமான ஐரோப்பியர் அல்லாத இனத்தவர் ஆவர். பெரிய ஐரிஷ் பஞ்சம் (1845–1849), ஏற்பட்ட காலத்தில் அவர்களுக்குத் தாராளமாக மனிதாபிமான உதவிகளைச் செய்தது தொடர்பாகவும் இவர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில் ஒக்லஹோமாவிலும், மிசிசிப்பியிலும் இருந்த சொக்ட்டோக்கள் பெரும்பாலும் கூட்டமைப்புக்கே ஆதரவாக இருந்தனர்.
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ "American Indian, Alaska Native Tables from the Statistical Abstract of the United States". Statistical Abstract of the United States: 2004-2005 (US Census Bureau) (124th ed.). http://www.census.gov/statab/www/sa04aian.pdf. பார்த்த நாள்: 2007-09-20.