சொளிங்கர்-எலிசன் கூட்டறிகுறி
சொளிங்கர்-எலிசன் கூட்டறிகுறி (Zollinger–Ellison syndrome) என்பது புத்திழையப் பெருக்கத்தால் இரைப்பையில் மிகையாக அமிலம் சுரக்கப்பட்டு வயிற்றுப் புண் ஏற்படுதல் ஆகும். இது ஒரு நரம்பிய அகஞ்சுரப்பியப் புத்திழையப் பெருக்கம் ஆகும். காசுத்திரின் எனும் இயக்குநீரைச் சுரக்கவல்ல காசுத்திரின் புத்திழையத்தால் இந்நோய் ஏற்படுகின்றது.[1] இரையகச் சுவரணுக்கள் (parietal cell) இரையகக்காடியைச் (ஐதரோகுளோரிக் காடி) சுரப்பதற்கு காசுத்திரினின் தூண்டல் தேவையானதாகும்.
சொளிங்கர்-எலிசன் கூட்டறிகுறி | |
---|---|
Endoscopy image of multiple small ulcers in the distal duodenum in a patient with Zollinger–Ellison syndrome | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | உட்சுரப்பியல் |
ஐ.சி.டி.-10 | E16.4 |
ஐ.சி.டி.-9 | 251.5 |
மெரிசின்பிளசு | 000325 |
ஈமெடிசின் | med/2437 ped/2472 |
பேசியண்ட் ஐ.இ | சொளிங்கர்-எலிசன் கூட்டறிகுறி |
ம.பா.த | D015043 |
சொளிங்கர்-எலிசன் கூட்டறிகுறி தன்னிச்சையாக அல்லது மரபணுப் பிறழ்ச்சியின் காரணமாக ஏற்படலாம். பன்மடிய அகஞ்சுரப்பிய புத்திழையப் பெருக்கம் வகை I (Multiple endocrine neoplasia type 1 / MEN-1 கூட்டறிகுறி) எனப்படும் அகஞ்சுரப்பியத் தொகுதியில் ஏற்படும் மரபியல் ஆட்சியுடைக் கூட்டறிகுறி நோயில் கணையம், முன்சிறுகுடல், நிணநீர்க் கணுக்கள் ஆகியனவற்றிலும் காசுத்திரின் புத்திழையத்தால் காசுத்திரின் சுரக்கப்படலாம். இவற்றை விட இதயம், சூலகம், பித்தப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற பகுதிகளிலும் இது ஏற்படலாம்.[2]
அறிகுறிகள்
தொகுவயிற்று வலியும் வயிற்றுப்போக்கும் இதனது பொதுவான அறிகுறிகள் ஆகும். [1] இரவில் உணவின் பொழுது அல்லது உண்ட பிற்பாடு ஏற்படும் உணவுக்குழாய் வலி, குமட்டல், குருதி வாந்தி, பசியின்மை ஆகியனவும் சொளிங்கர்-எலிசன் கூட்டறிகுறியில் காணப்படலாம்.
அறுதியிடல்
தொகுஅகநோக்கி மூலம் வயிற்றுப் புண் இருப்பது அறுதியிடப்பட்ட பின்னர் காசுத்திரின் அளவு அறியப்படும். செக்கிரெடின் சுரக்கப்படும் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதில் துணை புரிகின்றது. எனினும் இந்நோயில் செக்கிரெடின் கொடுக்கப்பட்ட பின்னரும் காசுத்திரின் அளவு மாறாது இருத்தல் இந்நோயை அருதிய்ட உதவுகின்றது.
சிகிச்சை
தொகுகுறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஏற்படக்கூடிய புத்திழையப் பெருக்கம் அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றப்பட முடியும். ஆனால் பரவியுள்ள புத்திழையப் பெருக்கம் அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றப்படமுடியாது. இந்நிலையில் அமிலம் சுரத்தலைத் தடுத்தலிற்குரிய மருந்துகள் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படுகின்றது.