சோகாகி பர்வா வனவிலங்கு காப்பகம்
சோகாகி பர்வா வனவிலங்கு காப்பகம் (Sohagi Barwa Wildlife Sanctuary) இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மகாராஜ்கஞ்சு மாவட்டத்தில் உள்ளது. இது நேபாள எல்லைக்கு அருகே கண்டகி ஆற்றின் மேற்குக் கரையில் 428.2 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1] உத்தரப்பிரதேசத்தில் உள்ள புலி வாழ்விடங்களில் சோகாகி பர்வா ஒன்றாகும். சோகாகி பர்வ வனவிலங்கு காப்பகம் ஏழு வனத் தொடர்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை பக்டி, மத்வாலியா, லட்சுமிபூர், வடக்கு சௌக், தெற்கு சௌக், சியோபூர் மற்றும் நிக்லால். இத்துடன் இந்தக் காப்பகம் 21 புல்வெளிகளைக் கொண்டுள்ளது. இந்தச் சரணாலயம் புலிகள் உட்படப் பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு இருப்பிடமாக உள்ளது.[2]
சோகாகி பர்வா வனவிலங்கு காப்பகம் | |
---|---|
ஆள்கூறுகள்: | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | மகராஜ்கஞ்ச் |
பரப்பளவு | |
• மொத்தம் | 428.2 km2 (165.3 sq mi) |
சரணாலயத்தின் நிலப்பரப்பு பெரும்பாலும் தட்டையானது. சராசரி உயரம் 100 மீட்டர் ஆகும். ஆண்டு முழுவதும் மிதமான காலநிலை நிலவுகிறது. குளிர்காலமும் மிதமானதாகவே இருக்கும்.[3]
அமைவிடம்
தொகுஅருகிலுள்ள தொடருந்து நிலையம் 22 கி. மீ. தொலைவில் உள்ள சிசுவா சந்தை ஆகும்.
சுற்றுலா இடங்கள்
தொகுசோகாகி பர்வா வனவிலங்கு சரணாலயத்தின் முக்கிய ஈர்ப்பாகப் புலிகள் உள்ளன. சிறுத்தை, கரடி, இந்திய புனுகுப் பூனை, ராட்சத அணில், முயல், காட்டுப் பூனை, காட்டுப்பன்றி, உடும்பு, நீலான் மற்றும் இந்திய மலைப் பாம்பு போன்ற பிற விலங்குகளும் உள்ளன. சரணாலயத்தில் ஏழு ஓய்வு இல்லங்கள் உள்ளன.
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Sohagibarwa". Protected Planet. Accessed 5 May 2020
- ↑ "Training Day for Sohagi Barwa Wildlife Sanctuary Staff". www.wwfindia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-01.
- ↑ "Advanced Search Summarization | Online Knowledge". Plex.page (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-01.