சோடியம் ஆர்சனைடு

வேதிச் சேர்மம்

சோடியம் ஆர்சனைடு (Sodium arsenide) என்பது Na3As என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் [1]. சோடியமும் ஆர்சனிக்கும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் டிரைசோடியம் ஆர்சனைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது ஒரு கருப்பு நிறங்கொண்ட திண்மச் சேர்மமாகும். நீர் அல்லது காற்றோடு தொடர்பு கொள்ளும்போது இது தரங்குறைகிறது. 200–400 ° செல்சியசு வெப்பநிலையில் தனிமங்கள் இரண்டும் வினைபுரிந்து சோடியம் ஆர்சனைடு உருவாகிறது [2]. இச்சேர்மம் முக்கியமாக ஒரு நவீனவகை கட்டமைப்பை வெளிப்படுத்துகிறது. சாதாரண அழுத்தத்தில் சோடியம் ஆர்சனைடு நிலை பல கார உலோக நிக்டைடுகளால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 3.6 கிகாபாசுக்கல் அழுத்தத்தில் Na3As சேர்மம் மற்றொரு நவீன கட்டமைப்பான Li3Bi கட்டமைப்பை ஏற்றுக் கொள்கிறது [3]. சோடியம் ஆர்சனைடு என்பது ஒரு படிகத்திண்மம் ஆகும். ஒரு குறைக்கடத்தியாகவும் புகைப்பட ஒளியியல் பயன்பாடுகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இதன் ஐயுபிஏசி பெயர் டைசோடியோ ஆர்சனைல்சோடியம் என்பதாகும்.

சோடியம் ஆர்சனைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைசோடியோ ஆர்சனைல்சோடியம்
இனங்காட்டிகள்
12044-25-6
பண்புகள்
Na3As
வாய்ப்பாட்டு எடை 143.89 கி•மோல்−1
தோற்றம் ஊதாபழுப்பு திண்மம்
அடர்த்தி 2.36 கி•செ.மீ−3
நீராற்பகுப்பு
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
உயர் அழுத்தத்தில் Na3 கனசதுரக் கட்டமைப்பை ஏற்றுள்ளது

.

மேற்கோள்கள் தொகு

  1. Elements, American. "Sodium Arsenide". American Elements. பார்க்கப்பட்ட நாள் 2018-12-05.
  2. E. Dönges (1963). G. Brauer (ed.). Alkali Metals (2nd ed.). New York: Academic Press. p. 986. {{cite book}}: |work= ignored (help)
  3. Beister, Heinz Jürgen; Syassen, Karl; Klein, Jürgen (1990). "Phase Transition of Na3As under Pressure". Zeitschrift für Naturforschung B 45 (10): 1388–1392. doi:10.1515/znb-1990-1007. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_ஆர்சனைடு&oldid=2956066" இலிருந்து மீள்விக்கப்பட்டது