சோடியம் குளோரோயிருபுளோரோ அசிட்டேட்டு
சோடியம் குளோரோயிருபுளோரோ அசிட்டேட்டு (Sodium chlorodifluoroacetate) என்பது C2ClF2NaO2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[2] கரிமப்புளோரின் உப்பான இது குளோரோயிருபுளோரோ அசிட்டிக் அமிலத்தையும் சோடியம் ஐதராக்சைடையும் ஒன்றாகச் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. இருபுளோரோகார்பீன் தயாரிக்க உதவும் மூலப்பொருளாகப் பயன்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
1895-39-2 | |
ChemSpider | 67266 |
EC number | 217-586-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 2734985 |
| |
UNII | ZAY4J838P2 |
பண்புகள் | |
C2ClF2NaO2 | |
வாய்ப்பாட்டு எடை | 152.46 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
உருகுநிலை | 196–198 °C (385–388 °F; 469–471 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- CF2ClCO2Na -> NaCl + CF2 + CO2
இந்த வினை அடி மூலக்கூறு கொண்ட ஒரு சூடான கரைசலில் நடத்தப்படுகிறது. திக்லைம் எனப்படும் பிசு(2-மெத்தாக்சியெத்தில்) ஈதர் ஒரு பொதுவான கரைப்பானாகும்.[2] சோடியம் சோடியம் குளோரோயிருபுளோரோ அசிட்டேட்டு மாற்றமானது கார்பாக்சில் குழு நீக்க வினையுடன் தொடங்க முன்மொழியப்படுகிறது. இது கார்பன் எதிர்மின் அயனியை ClF2C− உருவாக்குகிறது.
இருபுளோரோவளையபுரோப்பேனேற்றம் முக்கியமான பயன்பாடுகளில் ஒன்றாகும். முப்பீனைல் பாசுபீன் மற்றும் ஆல்டிகைடு ஆகியவற்றின் முன்னிலையில் சோடியம் குளோரோயிருபுளோரோ அசிட்டேட்டு வெப்பச் சிதைவுக்கு உட்படுவதால் விட்டிக் போன்ற வினைகள் அனுமதிக்கப்படுகிறது.[3] இவ்வினையில் (C6H5)3P=CF2 ஓர் இடைநிலையாக முன்மொழியப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sodium chlorodifluoroacetate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ 2.0 2.1 Taschner, Michael J. (2001). "Sodium Chlorodifluoroacetate". Encyclopedia of Reagents for Organic Synthesis. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.rs058. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93623-5.
- ↑ Fuqua, Samuel A.; Duncan, Warren G.; Silverstein, Robert M. (1967). "β,β-Difluorostyene". Organic Syntheses 47: 49. doi:10.15227/orgsyn.047.0049.