சோடியம் பியூமரேட்டு
வேதிச் சேர்மம்
சோடியம் பியூமரேட்டு (Sodium fumarate) C4H2Na2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[1] இரு சோடியம் பியூமரேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. பியூமரிக் அமிலத்தின் சோடியம் உப்பு எனவும் இது வகைப்படுத்தப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அமிலத்தன்மை சீராக்கியாக சோடியம் பியூமரேட்டு பயன்படுத்தப்படுகிறது.[1] சோடியம் பியூமரேட்டும் பியூமரிக் அமிலமும் சில நேரங்களில் காற்றில்லா நுண்ணுயிரிகளின் சாகுபடியில் முனைய எலக்ட்ரான் ஏற்பிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இருசோடியம் (2E)-பியூட்-2-ஈன்டையோயேட்டு | |
வேறு பெயர்கள்
இருசோடியம் பியூமரேட்டு, டைசோடியம் பியூமரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
5873-57-4 7704-73-6 (non-specific) | |
ChEBI | CHEBI:115156 |
ChemSpider | 4895542 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9734 |
| |
UNII | F11949924I |
பண்புகள் | |
C4H2Na2O4 | |
வாய்ப்பாட்டு எடை | 160.04 கி/மோல் |
தோற்றம் | வெண்மை நிறத் தூள் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மணமற்றதாக வெள்ளை நிறத்தில் படிக தூளாக சோடியம் பியூமரேட்டு தோன்றுகிறது. இது தண்ணீரில் கரையும். .
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 PubChem. "Disodium fumarate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-27.