சோடியம் புரோப்பனோயேட்டு
சோடியம் புரோப்பனோயேட்டு (Sodium propanoate) என்பது Na(C2H5COO) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் புரோப்பியோனேட்டு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைப்பர். புரோப்பியோனிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பு சோடியம் புரோப்பனோயேட்டு எனப்படுகிறது. வெண்மை நிறப் படிகங்களாகக் காணப்படும் இச்சேர்மம் ஈரக்காற்றிலுள்ள நீரை உறிஞ்சும் நீருறிஞ்சியாகக் கருதப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் புரோப்பனோயேட்டு
| |
வேறு பெயர்கள்
சோடியம் புரோப்பியோனேட்டு
நாப்ரோபியோன் இ281 | |
இனங்காட்டிகள் | |
137-40-6 | |
ChEBI | CHEBI:132106 |
ChEMBL | ChEMBL500826 |
ChemSpider | 8399 |
EC number | 205-290-4 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8724 |
| |
UNII | DK6Y9P42IN |
பண்புகள் | |
C3H5NaO2 | |
வாய்ப்பாட்டு எடை | 96.060 கி/மோல் |
தோற்றம் | ஒளியூடுறுவும் படிகங்கள் |
மணம் | இலேசான அசிட்டிக்-பியூட்டைரிக் நெடி |
உருகுநிலை | 289 °C (552 °F; 562 K) |
1 கி/மி.லி | |
கரைதிறன் | எத்தனால் (1 கி/24 மி.லி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபுரோப்பியோனிக் அமிலத்துடன் சோடியம் கார்பனேட்டு அல்லது சோடியம் ஐதராக்சைடு சேர்த்து வினைபுரியச் செய்தால் சோடியம் புரோப்பனோயேட்டு உருவாகிறது.
பயன்கள்
தொகுஐரோப்பிய யூனியன்[2], அமெரிக்கா[3], ஆத்திரேலியா, நியூசிலாந்து[4] போன்ற நாடுகளில் உணவு பாதுகாப்புப் பொருளாக சோடியம் புரோப்பனோயேட்டு பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பாவில் அனுமதிக்கப்படும் உணவு கூட்டுப்பொருட்களுக்கு வழங்கப்படும் எண் இதற்கு இ281 என வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. அடுமனை தொழிலில் ரொட்டி உற்பத்தியில் வார்ப்பு தடுப்பியாக இதைப் பயன்படுத்துகிறார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Merck Index, 11th Edition, 8623.
- ↑ UK Food Standards Agency: "Current EU approved additives and their E Numbers". பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
- ↑ US Food and Drug Administration: "Listing of Food Additives Status Part II". பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
- ↑ Australia New Zealand Food Standards Code"Standard 1.2.4 - Labelling of ingredients". பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
புற இணைப்புகள்
தொகு- Sodium propanoate at Sci-toys.com