சோட்டோனெரா லாகசு

சோட்டோனெரா லாகசு (Sotonera Lacus) என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் எண்ணற்ற ஐதரோகார்பன் ஏரிகளில் இதுவும் ஒரு ஏரியாகும் [1]. 76.75° மற்றும் 17.49° மே [2] என்ற அடையாள ஆள்கூறுகளில் தோராயமாக 63 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக டைடனின் வடதுருவத்தின் மையத்தில் இந்த ஏரி காணப்படுகிறது. டைட்டனின் பெரிய ஏரிகள் யாவும் இதன் வடதுருவ மண்டலத்தில் காணப்படுகின்றன.

நீர்ம ஐதரோகார்பன்களான திரவ ஈத்தேனும் மீத்தேனும் [3] சேர்ந்து இந்த ஏரியை உருவாக்கியுள்ளன. கேசின் விண்வெளி ஆய்வு விண்கலம் இந்த ஏரியைக் கண்டுபிடித்தது. பூமியில் உள்ள எசுப்பானியாவின் சோட்டோனெரா ஏரியின் நினைவாக டைட்டனின் இந்த ஏரிக்கு சோட்டோனெரா லாகசு என்று 2007 ஆம் ஆண்டு பெயரிடப்பட்டது

.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோட்டோனெரா_லாகசு&oldid=2173837" இலிருந்து மீள்விக்கப்பட்டது