சோனி யே! என்பது சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தின் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை ஏப்ரல் 18, 2017 ஆம் ஆண்டு முதல் மகாராட்டிரம் மாநிலத்தில் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, கன்னடம், வங்காளம் மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் இயங்கி வருகின்றது.

சோனி யே!
தொடக்கம்18 ஏப்ரல் 2017; 6 ஆண்டுகள் முன்னர் (2017-04-18)
உரிமையாளர்சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு
இந்தி
ஆங்கிலம்
கன்னடம்
மராத்தி
வங்காளம்
ஒலிபரப்பப்படும் பகுதிஇந்தியா
வங்காளம்
நேபால்
தலைமையகம்மும்பை, இந்தியா
சகோதர ஊடகங்கள்சோனி தொலைக்காட்சி
சோனி சாப்
சோனி பால்
சோனி மேக்ஸ்
சோனி மேக்ஸ் 2
சோனி ஆத்
சோனி வா
சோனி பிக்ஸ்
சோனி மராத்தி
சோனி சிக்ஸ்
சோனி பிபிசி எர்த்
சோனி டென்
இணையதளம்www.sonyyay.com

வரலாறு தொகு

இந்த அலைவரிசை அனிமேக்சு என்ற தொலைக்காட்சிக்கு பதிலாக ஏப்ரல் 18, 2017 அன்று தொடங்கப்பட்டது. மறுபெயரைத் தொடர்ந்து சோனி பிக்சர்சு நெட்வொர்க்சு அனிமேக்ஸில் இடம்பெற்றுள்ள அனைத்து அனிமே நிகழ்ச்சிகளை கட்டண உள்ளடக்கமாக அதன் ஓடிடி தளமான சோனி எல்ஐவிக்கு மாற்றுவதற்கான திட்டங்களை அறிவித்தது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Sony to shift Animax channel to SonyLiv". 13 April 2017.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனி_யே!&oldid=3308960" இலிருந்து மீள்விக்கப்பட்டது