சோன்பப்டி (திரைப்படம்)

இந்தியத் தமிழ்த் திரைப்படம்

சோன்பப்டி (Soan Papdi) என்பது 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காமிக் குற்றவியல் பரபரப்புத் திரைப்படம் ஆகும். அறிமுக இயக்குநரான சிவாணி இயக்கிய இப்படத்தில் வழக்கு எண் 18/9 புகழ் ஸ்ரீ, குழந்தை நட்சத்திரம் சாஹில் (அறிமுகம்), பிரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மனோபாலா, பட்டிமன்றம் ராஜா, பெசன்ட் ரவி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு மர்மமான காரணத்தால் இறக்கும் ஒரு பொறியாளரைப் பற்றியும், அவரது இறப்பில் உள்ள மர்ம முடிச்சு எவ்வாறு அவிழ்க்கப்படுகிறது என்பதையும் கதை விவரிக்கிறது. கோல்டன் மூவி மேக்கர் பதாகையின் கீழ் எஸ். கலைவாணி இப்படத்தை தயாரித்தார்.[1]

சோன்பப்டி
இயக்கம்சிவாணி
தயாரிப்புஎஸ். கலைவாணி
கதைசிவாணி
இசைதன்ராஜ் மாணிக்கம்
நடிப்புஸ்ரீ
சாஹில்
பிரியா
நிரஞ்சனா
ஒளிப்பதிவுதாணு பாலாஜி
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
கலையகம்கோல்டன் மூவி மேக்கர்
வெளியீடு29 மே 2015 (2015-05-29)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

சோன்பப்டி படப் பாடல்களுக்கு தன்ராஜ் மாணிக்கம் இசையமைத்தார். நா. முத்துக்குமார், அண்ணாமலை, எஸ். கலைவாணி ஆகியோர் பாடல் வரிகளை எழுதினர். இந்த படத்தின் பாடல்களை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர். கானா பாலாவின் முதல் டூயட் பாடலைக் கொண்ட திரைப்படம் இதுவாகும்.

வெளியீடு

தொகு

டைம்ஸ் ஆப் இந்தியா இந்த படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் ஒன்னரை மதிப்பீட்டைக் கொடுத்து.[2]

குறிப்புகள்

தொகு
  1. "Crime Thriller with a 'Sweet Link'". The New Indian Express.
  2. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/soan-papdi/movie-review/47489590.cms

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோன்பப்டி_(திரைப்படம்)&oldid=4160817" இலிருந்து மீள்விக்கப்பட்டது