சோபகிருது ஆண்டு
சோபகிருது ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் முப்பத்தேழாம் ஆண்டாகும்.[1] இந்த ஆண்டை செந்தமிழில் மங்கலம் என்றும் குறிப்பர்.
சோபகிருது ஆண்டு வெண்பா
தொகுசோபகிருது ஆண்டு எப்படிப்பட்டது என்பது குறித்து இடைக்காட்டுச் சித்தர் இயற்றியதாக கூறப்படும் அறுபது வருட வெண்பாவில்
சோப கிருதுதன்னிற் றெல்லுலகெல் லாஞ்செழிக்குங்
கோப மகன்று குணம்பெருகுஞ்- சோபனங்கள்
உண்டாகு மாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்
உண்டாகு மென்றே யுரை.
இந்தப் பாடலின்படி இந்த ஆண்டில், அதாவது சோபகிருது ஆண்டில் மக்கள் எல்லா நலன்களையும் பெற்று வாழ்வர். கோப குணங்கள் குறையும். போட்டி, பொறாமை குணங்கள் மறையும். நற்பலன்கள் மேலோங்கும். மங்கல நிகழ்வுகள் நடக்கும். உலகின் பழமையான நகர்கள் செழிப்பாகவும், சிறப்பாகவும் இருக்கும். மழை சிறப்பாக பெய்து செழுமை அதிகரிக்கும்.[2]
முக்கிய நிகழ்வுகள்
தொகு- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு 28 ஆகத்து 1963 (சோபகிருது ஆண்டு, ஆவணி 12, புதன்கிழமை) அன்று நாட்டுக்கோட்டை நகரத்தாரால் குடமுழுக்கு செய்யபட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சோபகிருது". பொருள். விக்சனரி. பார்க்கப்பட்ட நாள் 20 ஏப்பிரல் 2023.
- ↑ "சோபகிருது தமிழ் புத்தாண்டு பொது பலன்கள் 2023 -2024". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-04-20.