சோபியா முஸ்தபா

இந்திய எழுத்தாளர், ஆசிரியை மற்றும் அரசியல்வாதி

சோபியா முஸ்தபா (1922 – 1 செப்டம்பர் 2005) இந்தியாவின்காஷ்மீரி வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளரும் அரசியல்வாதியுமாவார்.

வாழ்க்கை

தொகு

சோபியா முஸ்தபா, 1922 ம் ஆண்டு இந்தியாவின் காஷ்மீரில் பிறந்தார், கென்யாவின் நைரோபியில் தான் வளர்ந்தும், படித்தும் உள்ளார். அங்கேயே அப்துல்லா முஸ்தபா என்ற வழக்கறிஞரை மணந்த சோபியா, தனது கணவருடன் 1948 ம் ஆண்டில் தங்கனியகாவில் இல்ல அருஷா என்ற இடத்திற்கு (இப்போது தன்சானியா என்று அழைக்கப்படுகிறது) குடிபெயர்ந்தார்.பின்னர் தம்பதியினர் தாருஸ் சலாமுக்கு இடம்பெயர்ந்தனர். நாட்டின் சுதந்திரத்திற்காக ஜூலியஸ் நைரேருடன் இணைந்து இத்தம்பதியர் போராடியுள்ளனர். 1958 ஆம் ஆண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அருஷா மாவட்டத்திற்கான தங்கனியகாவின் சட்ட மேலவைக்கு சிறிது காலம் சோபியா பணியாற்றியுள்ளார். அவர் நாட்டின் பாராளுமன்றத்தில் (நாடு பின்னர் தான்சானியா ஆனது) 1965 ஆம் ஆண்டில் அவரது கணவர் திரும்ப அழைக்கப்படும் வரை பணியாற்றியுள்ளார்கள்.[1][2][3]

ஆப்பிரிக்க கண்டத்தின் ஆரம்பகால வெள்ளையர் அல்லாத பெண் சட்டமன்ற உறுப்பினர்களில் சோபியாவும் ஒருவரே. மாபெல் டவ் டான்குவா (கோல்ட் கோஸ்ட், 1954), செனெடு கெப்ரு (எத்தியோப்பியா, 1957) மற்றும் எல்லா கோப்லோ குலாமா (சியரா லியோன், 1957) ஆகியோர் சோபியாவுடன் பட்டியலில் உள்ள வெள்ளையர் அல்லாத நாடாளுமன்ற சிறிய எண்ணிக்கையிலான முன்னோடிகளாவர். 

1961 ம் ஆண்டில், ஆப்பிரிக்காவின் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் நேசத்துக்குரிய தலைவர்களில் ஒருவரான ஜூலியஸ் நைரேரே உட்பட, தான்சானியாவின் புதிய தேசத்தை வடிவமைக்க உதவிய முதல் தலைமுறை அரசியல்வாதிகள், தான்சானியாவின் ஆரம்ப ஆண்டுகளின் பெண்ணிய வாசிப்புகள் மற்றும் சோபியா முஸ்தபாவின் தனிப்பட்ட விவரங்களுடன் இணைந்த அசாதாரண சுயசரிதை நினைவுக்குறிப்புகள் தி டாங்கனியகா வே என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.[1]

1989 ம் ஆண்டில், சோபியா தனது கணவருடன் கனடாவுக்குச் சென்று, ஒன்டாரியோவின் பிராம்ப்டனில் குடியேறினார்கள். முஸ்தபா 2002 இல் கிரிண்யாகாவின் நிழலில் என்ற பெயரில் ஒரு நாவலை வெளியிட்டார் (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781894770033 ). ஆசிய முஸ்லீம் குடும்பத்தின் கண்ணோட்டத்தில் ஆரம்ப காலனித்துவ கென்யாவின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு அரிய பார்வையை வெளிப்படுத்தும் வகையில் இந்த புதினம் அமைந்துள்ளது. சோபியா முஸ்தபா 2005ம் ஆண்டில் பிராம்ப்டனில் மரணமடைந்தார்.இவரது இரண்டாவது நாவலான தி ப்ரோக்கன் ரீட் அதே ஆண்டில் அவரின் மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789987411177 ).[2][1] இந்திய சுதந்திரத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்பு, ஆப்பிரிக்காவில் மாற்றப்பட்ட வளர்ப்பு மற்றும் ஒரு பாகிஸ்தானிய உறவினருடன் திணிக்கப்பட்ட திருமணத்தை அனுபவித்து உயிர் பிழைத்த நூரின் என்ற முஸ்லீம் பெண்ணின் கதையாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Sophia Mustafa". September 1, 2005. https://thestarphoenix.remembering.ca/obituary/sophia-mustafa-1066555167. "Sophia Mustafa". Saskatoon Star-Phoenix. September 1, 2005.
  2. 2.0 2.1 "Sophia Mustafa". Asian Heritage in Canada. Ryerson University Library. Archived from the original on 2022-07-01. பார்க்கப்பட்ட நாள் 2023-03-11."Sophia Mustafa" பரணிடப்பட்டது 2022-07-01 at the வந்தவழி இயந்திரம். Asian Heritage in Canada. Ryerson University Library.
  3. Commerce with the Universe: Africa, India, and the Afrasian Imagination. Columbia University Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபியா_முஸ்தபா&oldid=4110266" இலிருந்து மீள்விக்கப்பட்டது