சோமன் சாம்பவன் (கதைமாந்தர்)

சோமன் சாம்பவன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற பாண்டிய ஆபத்துதவிகளில் ஒருவராவார். வரலாற்றில் மாபெரும் வீரனாக இடம்பெற்ற சோமனை சற்று புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.

சோமன் சாம்பவன்
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
Idumbankaari and Soman Saambavan.jpg
இடும்பன்காரியிடம் பாண்டிய சைகையை காட்டும் சோமன் சாம்பவன்.
முதல் தோற்றம் பொன்னியின் செல்வன்
உருவாக்கியவர் கல்கி
தகவல்
பிற பெயர்பாண்டிய ஆபத்துதவிகள்,
தொழில்வீரபாண்டியனை கொன்றமைக்காக சோழ குடும்பத்தினை பழிவாங்குதல்.
தேசிய இனம்பாண்டிய நாடு

கதாப்பாத்திரத்தின் இயல்புதொகு

சோமன் சாம்பவன், ரவிதாசன் உட்பட்டப் பல பாண்டிய ஆபத்துதவிகள் வீரபாண்டியன் (கதைமாந்தர்)வீரபாண்டியனை, ஆதித்த கரிகாலன் கொன்றமையினால், சோழ வம்சத்தினைப் பழிவாங்குவதற்காகச் சபதம் எடுத்தவர்கள். நெடுங்காலம் திட்டமிட்டு பலமுறை முயன்றனர். இறுதியாகச் சுந்தர சோழர், ஆதித்த கரிகாலர், அருள்மொழி வர்மன் மூவரையும் ஒரே நாளில் கொல்லத் திட்டம் தீட்டினர். இத்திட்டத்தில் நோயுற்றுப் படுக்கையில் இருந்த சுந்தர சோழனை நிலவறைக்குள் ஒளிந்திருந்து சமயம் பார்த்துக் கொல்லும் பொறுப்பு சோமன் சாம்பசிவனுக்குக் கொடுக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்தொகு