சோமன துடி (திரைப்படம்)
'சோமன துடி ( கன்னடம்: ಚೋಮನ ದುಡಿ , (Chomas Drum) கன்னட மொழியில் வெளிவந்த ஒரு திரைப்படம் ஆகும். இது சிவராம் காரந்த் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு 'சோமன துடி என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் சிறந்த படத்திற்கான இந்தியாவின் தேசிய விருதான ஸ்வர்ண கமல் விருதை வென்றது.[1]
சோமன துடி | |
---|---|
இயக்கம் | பி.வி.கரந்து |
தயாரிப்பு | பிரஜா பிலிம்சு |
கதை | சிவராம் கரந்து |
இசை | பி.வி.கரந்து |
நடிப்பு | எம்.வி.வாசுதேவ ராவ் பத்மா கும்டா ஜெயராஜன் சுந்தர் ராஜ் கொன்னையா கோவிந்த பட் |
ஒளிப்பதிவு | எஸ்.இராமச்சந்திரா |
படத்தொகுப்பு | P. Bhaktavatsalam |
வெளியீடு | 1975 |
ஓட்டம் | 141 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
கதைச்சுருக்கம்
தொகுசோமா ஒரு கிராமத்தில் ஒரு தீண்டத்தகாத கொத்தடிமைத் தொழிலாளி ஆவார், அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தனது குடும்பத்துடன் நில உரிமையாளரிடம் வேலை செய்கிறார். [2] அவரது சமூக அந்தஸ்து காரணமாக, அவர் மிகவும் விரும்பும் தனது சொந்த நிலத்தை உழவு செய்ய அனுமதிக்கப்படவில்லை. காட்டில் வழிதவறி வந்த ஒரு ஜோடி காளை மாடுகளை அவரால் வளர்க்க முடிந்த்து. அவற்றை பயன்படுத்தி நிலத்தை உழ முடியவில்லை. அவர் கிறிஸ்தவ மிஷனரிகளுடன் தொடர்பு கொள்கிறார். அவர்கள் அவருக்கு நிலத்தின் மீது ஆசை காட்டி அவரை மதம் மாற்ற முயற்சிக்கின்றனர், ஆனால் சோமா தனது மத நம்பிக்கையை விட்டுவிட விரும்பவில்லை. விதி வசத்தால் பாதிப்புற்ற இவர், தன் கோபத்தை, தன்னிடமிருந்த பறையை அடித்து வெளிப்படுத்துகிறார்.
அவருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்; அவருடைய மூத்த மகன்களில் இருவர் தொலைதூர காபி எஸ்டேட்டில், கடனை அடைப்பதற்காக வேலை செய்கிறார்கள். ஒரு மகன் காலராவால் இறக்கிறான், மற்றொருவன் ஒரு கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகிறான். அவரது மகள் பெள்ளி தோட்டத்தில் வேலை செய்கிறாள். தோட்ட உரிமையாளரிடம் எழுத்தராக பணியாற்றும் மண்வெலா என்பவனின் கவர்ச்சியில் மயங்குகிறாள். சோமாவின் கடனைத் தள்ளுபடி செய்த எஸ்டேட் உரிமையாளர், பெள்ளியைக் கற்பழிக்கிறான். அவள் சோமாவின் வீட்டிற்குத் திரும்பி அவனிடம் நடந்த உண்மையைச் சொல்கிறாள். அவரது இளைய மகன் தீண்டத்தகாதவன் என்பதால், ஆற்றில் மூழ்கிய போது யாரும் அவனைக் காப்பாற்ற முன்வரவில்லை. எனவே ஆற்றில் மூழ்கி இறந்துபோகிறான். பின்னர் சோமன் ஒரு நாள், தனது மகளை மண்வேலாவுடன் மோசமான நிலையில் காண்கிறார். கோபத்தில் அவளை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அவரது விதியை மீற, அவர் ஒரு நிலத்தை உழ ஆரம்பித்து, பின்னர் தனது காளையை காட்டுக்குள் விரட்டுகிறார். படத்தின் முடிவில் சோமா தனது வீட்டிற்குள் தன்னை மூடிக்கொண்டு இறக்கும் வரை டிரம் வாசிக்கத் தொடங்குகிறார்.
விருதுகள்
தொகு- சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது (1976)
- சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது - எம்.வி.வாசுதேவ ராவ் (1976)
- சிறந்த கதைக்கான தேசிய திரைப்பட விருது - கே சிவராம் கரந்த்
- கர்நாடக மாநில திரைப்பட விருதுகள் 1975-76
- முதல் சிறந்த படம்
- சிறந்த நடிகர் - எம்.வி.வாசுதேவ் ராவ்
- சிறந்த துணை நடிகை - பத்மா குமாதா
- சிறந்த கதையாசிரியர் - சிவராம் காரந்த்
- சிறந்த திரைக்கதை - சிவராம் கரந்த்
- சிறந்த ஒலிப்பதிவு - கிருஷ்ணமூர்த்தி
மேற்கோள்கள்
தொகு- ↑ "A genius of theatre". The Frontline. 12–25 October 2002. Archived from the original on 29 March 2005. பார்க்கப்பட்ட நாள் 2009-03-14.
- ↑ Shampa Banerjee, Anil Srivastava (1988), p65
உசாத்துணை
தொகு- Shampa Banerjee, Anil Srivastava (1988) [1988]. One Hundred Indian Feature Films: An Annotated Filmography. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8240-9483-2.