சோமேசுவர் கடற்கரை
இந்திய நகரம் மங்களுரிலுள்ள ஒரு கடற்கரை
சோமேசுவர் கடற்கரை (Someshwar Beach) என்பது இந்தியாவின் மங்களூர் நகரில் உல்லாலில் அமைந்துள்ள ஒரு கடற்கரையாகும். கடலோரத்தில் பல நூற்றாண்டுகளாக இருக்கும் சோமேஸ்வரா கோவிலால் இதற்கு 'சோமேசுவர கடற்கரை' என்ற பெயர் உருவானது.[1]
சோமேசுவர் கடற்கரை | |
---|---|
கடற்கரை | |
அமைவிடம் | உல்லால் |
நகரம் | மங்களூர் |
நாடு | இந்தியா |
அருகிலுள்ள ஈர்ப்புகள் | சோமேசுவரர் கோயில் |
அரசு | |
• நிர்வாகம் | உல்லால் நகராட்சி |
இந்த கடற்கரைக்கு அருகில் ஒட்டினீன் மலை உள்ளது. இந்த மலையிலிருந்து நேத்ராவதி ஆறு அரபிக் கடலில் கலக்கிறது. இந்த மலையில் இயற்கையாக வளரும் பசுமையான தாவரங்களும், மருத்துவத் தாவரங்களும் உள்ளன.[1]
ருத்ர பாதம்
தொகுஇந்தக் கடற்கரையில் ருத்ர சிலை அல்லது ருத்ர பாதம் என்று அழைக்கப்படும் பெரிய பாறைகளுக்கு பெயர் பெற்றது. 'ருத்ரா' என்பதற்கு 'சிவன்' என்றும் 'பாதா' அல்லது 'சிலே' என்றால் துளு மொழியில் 'பாறை' என்றும் பொருள்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Someshwara Temple and Beach at Ullal, Mangalore - Review of Someshwara Temple and Beach, Mangalore, India - TripAdvisor". www.tripadvisor.in. பார்க்கப்பட்ட நாள் 2016-10-02.
- ↑ "Someshwara Beach | Mangalore Beach | Ullal" (in அமெரிக்க ஆங்கிலம்). 2011-12-02. பார்க்கப்பட்ட நாள் 2016-10-02.