சோலிபேசிலசு கலாமி
சோலிபேசிலசு கலாமி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
தொகுதி: | பேசொலோடா
|
வகுப்பு: | பேசிலி
|
வரிசை: | பேசிலாலெசு
|
குடும்பம்: | பிளானோகாக்கேசியே
|
பேரினம்: | சோலிபேசிலசு
|
இனம்: | சோ. கலாமி
|
இருசொற் பெயரீடு | |
சோலிபேசிலசு கலாமி செசின்சுகா மற்றும் பலர் 2017[1] | |
Type strain | |
DSM 101595, NRRL B-65388, ISSFR-015[2] |
சோலிபேசிலசு கலாமி (Solibacillus kalamii) என்பது ஒரு கிராம்-நேர் பாக்டீரியா. இந்தப் பாக்டீரியா தடி வடிவன, எண்டோஸ் போர்- உருவாக்கும் மற்றும் காற்றினைச் சுவாசித்து வாழும் சோலிபேசிலசு பேரினத்தினைச் சார்ந்தது. இது உயர் திறன் கொண்ட துகள் வடிகட்டி அமைப்பினைப் பயன்படுத்தி அனைத்துலக விண்வெளி நிலையத்தினால் பிரித்தெடுக்கப்பட்டது.[1][2][3][4][5]
கண்டுபிடிப்பு
தொகுஅனைத்துலக விண்வெளி நிலையத்தில் வழக்கமான பராமரிப்பு மற்றும் துப்புரவு அமைப்பான உயர் செயல்திறன் துகள்கள் வடிகட்டி அல்லது கீபா வடிப்பானில் இந்தப் பாக்டீரியா இருந்தது கண்டறியப்பட்டது. இது அனைத்துலக விண்வெளி நிலையத்தில் 40 மாதங்களுக்கு மேலாக இருந்தது. இந்த வடிகட்டி பின்னர் 2017ஆம் ஆண்டில் கிரகங்களுக்கிடையேயான பயணத்திற்கான ஆய்வுக்காகத் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாக முன்னணி ஆய்வகமான தாரை உந்தும் ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. உயிரித் தொழில்நுட்பம் மற்றும் கிரகப் பாதுகாப்புக் குழுவின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி முனைவர் கஸ்தூரி வெங்கடேசுவரன் இந்தக் கண்டுபிடிப்பு குறித்து பன்னாட்டு அமைப்பின் பரிணாம நுண்ணுயிரியல் இதழில் வெளியிட்டார்.
1963ஆம் ஆண்டில் நாசாவில் ஆரம்பக்காலப் பயிற்சி பெற்ற புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானி டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாமின் பெயரால் இந்த புதிய பாக்டீரியா பெயரிடப்பட்டது.
சிறப்பியல்புகள்
தொகுசோலிபேசிலசு கலாமி அதிகக் கதிர்வீச்சைத் தாங்கி, உயிரித் தொழில்நுட்பப் பயன்பாடுகளுக்கு உதவியாக இருக்கும் புரத வாரியான சில பயனுள்ள சேர்மங்களையும் உற்பத்தி செய்கின்றன. ஆராய்ச்சியாளர்கள் இந்த பாக்டீரியாவை முழுமையாக வகைப்படுத்தவில்லை. ஆனால் கதிர்வீச்சு சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும் இரசாயனங்களுக்குப் புதிய ஆதாரமாக இருக்கும் என்று இவர்கள் கருதுகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Solibacillus". LPSN. https://lpsn.dsmz.de/genus/solibacillus.
- ↑ 2.0 2.1 Solibacillus kalamii. https://www.uniprot.org/taxonomy/1748298.
- ↑ Details: DSM-101595. https://www.dsmz.de/catalogues/details/culture/DSM-101595.html.
- ↑ Parker, Charles Thomas; Garrity, George M (7 December 2016). Parker, Charles Thomas; Garrity, George M (eds.). "Taxonomy of the species Solibacillus kalamii Sielaff et al". NamesforLife, LLC. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1601/tx.29716.
- ↑ Checinska Sielaff, Aleksandra; Kumar, Rajendran Mathan; Pal, Deepika; Mayilraj, Shanmugam; Venkateswaran, Kasthuri (1 April 2017). "Solibacillus kalamii sp. nov., isolated from a high-efficiency particulate arrestance filter system used in the International Space Station". International Journal of Systematic and Evolutionary Microbiology 67 (4): 896–901. doi:10.1099/ijsem.0.001706. பப்மெட்:28475026.