சோலைபாடி
சோலைபாடி | |
---|---|
ஆண் | |
பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. malabaricus
|
இருசொற் பெயரீடு | |
Copsychus malabaricus (Scopoli, 1788) | |
வேறு பெயர்கள் | |
Kittacincla macrura |
சோலைபாடி (white-rumped shama) என்பது குருவி வரிசையில் வைக்கபட்டுள்ள பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பறவை ஆகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்திலும், தென்கிழக்கு ஆசியாவிலும் அடர்த்தியான தாவரங்கள் நிறைந்த பகுதியில் காணப்படுகிறது. இது ஒரு பாடும் பறவை ஆகும். இப்பறவையைச் சிலர் கூண்டில் வளர்பதும் உண்டு. இதனால் பிற இடங்களுக்கு அறிமுகப்படுத்தபட்டது.
வகைப்பாடு
தொகுஇது முன்னர் திரஷ் குடும்பத்தின் உறுப்பினரான டர்டிடே என வகைப்படுத்தப்பட்டது, இதனால் இது பொதுவாக வெள்ளைப் பிட்ட சாமா திரஷ் அல்லது சாமா திரஷ் என்று அழைக்கப்படுகிறது.
விளக்கம்
தொகுஇப்பறவை பொதுவாக 28 முதல் 34 கிராம் (1.0 மற்றும் 1.2 அவுன்ஸ்) வரை எடையும், 23-28 செமீ (9-11 அங்குலம்) நீளமும் கொண்டது. ஆண் பறவைகளின் உடலின் மேற்பகுதி பளபளப்பாக கருப்பாகவும், பிட்டம் வெண்மையாகவும், வயிறும் வாலடியும் நல்ல செம்பழுப்பு நிறத்திலும் இருக்கும். வால் நீண்டு இருக்கும். முனை நோக்கி குறுகிச் செல்லும் நீண்ட வாலின் ஓர இறகுகளின் விளிம்பு வெண்மையாக இருக்கும். ஓர இறகுகளின் முனையும் வெண்மையாக இருக்கும். பெண் பறவையின் உடல் கருப்புக்குப் பதிலாக சிலேட் பழுப்பாக இருக்கும். வயிறும் வாலடியும் நிறம் மங்கிக் காணப்படும். ஆண் பறவையின் வாலை விட இதன் வால் நீளம் குறைவாக இருக்கும். இரு பாலினத்தவைக்கும் கருப்பு நிற அலகும், இளஞ்சிவப்பு பாதங்களும் உள்ளன. வயது முதிராத இளம் பறவைக்கள் சாம்பல்-பழுப்பு நிறத்தில், பெண் பறவையின் நிறத்தைப் போன்றே இருக்கும். மார்பில் புள்ளிகள் இருக்கும்.
நடத்தை
தொகுஇனப்பெருக்கம்
தொகுசோலைபாடி கூச்சசுபாவமுள்ளது வெட்கப்படக்கூடியது மற்றும் சற்றே அந்திமாலையில் தோன்றுகிற பறவையாகும்.[3] ஆண் பெண் பறவைகள் இனப்பெருக்க காலத்தில் ஒரு பிரதேசத்தை எல்லையாகக் கொண்டு வாழக்கூடியது. ஆண் பறவைகள் சராசரியாக 0.09 ஹெக்டேர் பரப்பளவை தன் எல்லையாக கொண்டு காக்கின்றது.[4] ஆனால் ஒவ்வொரு பாலினமும் அவை இனப்பெருக்கம் செய்யாதபோது வெவ்வேறு பிரதேசங்களில் வாழக்கூடியதாக இருக்கலாம்.
தெற்காசியாவில், இவை சனவரி முதல் செப்டம்பர் வரை இனப்பெருக்கம் செய்கின்றன, ஆனால் முதன்மையாக ஏப்ரல் முதல் சூன் வரை நான்கு அல்லது ஐந்து முட்டைகளை[5] காதலூட்டத்தின் போது, ஆண் பறவை பெண்ணைப் பின்தொடர்ந்து, பெண்ணின் மேலே ஏறி, கூச்சலிட்டு, பின்னர் தன் வால் இறகுகளை அசைத்து விசிறி விடும். இதைத் தொடர்ந்து இரு பாலினத்தவையும் உயரப்பறந்தும், கீழே பாய்ந்தும் பறக்கின்றன.
மரப் பொந்தில் கட்டும் கூட்டில் இடுகின்றன.[3] பெண் பறவை மட்டும் கூடு கட்டும், அப்போது ஆண் பறவை காவலாக நிற்கும்.[4][6] இது தன் கூட்டை முக்கியமாக வேர்கள், இலைகள், தண்டுகள் போன்றவற்றால் கோப்பை வடிவில் அமைக்கின்றது. அடைகாக்கும் காலம் 12 முதல் 15 நாட்கள் வரை நீடிக்கும் மேலும் குஞ்சு பொரிக்கும் காலம் சராசரியாக 12.4 நாட்கள் ஆகும். பெற்றோர் இரண்டும் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுகின்றனளிக்கிறன இருப்பினும் பெண் மட்டுமே அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றது.[4] முட்டைகள் வெளிர் நீலம் தோய்ந்த பசுமையாக செம்பழுப்புக் கறைகளோடும் புள்ளிகளோடும் காட்சியளிக்கும். முட்டை சுமார் 18 மற்றும் 23 மிமீ (0.7 மற்றும் 0.9 அங்குலம்) பரிமாணங்களுடன் இருக்கும்.
உணவு
தொகுஇவை காடுகளில் காணப்படும் பூச்சிகளை உண்கின்றன. ஆனால் சிறைபிடிக்கப்பட்டு வளர்க்கப்பும் நிலையில் இதற்கு முட்டையின் மஞ்சள் கரு மற்றும் பச்சை இறைச்சியுடன் வேகவைத்த, உலர்ந்த பருப்பு வகைகளை உணவாக அளிக்கலாம்.[7]
மேற்கோள்
தொகு- ↑ BirdLife International (2013). "Copsychus malabaricus". IUCN Red List of Threatened Species 2013: e.T22734262A50448114. doi:10.2305/IUCN.UK.2013-2.RLTS.T22734262A50448114.en. https://www.iucnredlist.org/species/22734262/50448114.
- ↑ "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
- ↑ 3.0 3.1 Rasmussen PC & Anderton, JC (2005) Birds of South Asia: The Ripley Guide. Smithsonian Institution & Lynx Edicions, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8487334679, pp. 395–396
- ↑ 4.0 4.1 4.2 Aguon, Celestino Flores; Conant, Sheila (1994). "Breeding biology of the white-rumped Shama on Oahu, Hawaii". Wilson Bulletin 106 (2): 311–328. http://sora.unm.edu/sites/default/files/journals/wilson/v106n02/p0311-p0328.pdf.
- ↑ Whistler, H (1949) Popular handbook of Indian birds. Gurney and Jackson. p. 110
- ↑ Ali, S. and Ripley, S. D. (1973). Handbook of the birds of India and Pakistan. Vol. 8., Oxford Univ. Press, Bombay, India.
- ↑ Jerdon, T. C. (1863) Birds of India. Vol 2. part 1. page 131