சோல்பரி அரசியல் யாப்பு

சோல்பரி அரசியல் யாப்பு இலங்கையில் 1947 இல் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் யாப்புச் சீர்திருத்தம் ஆகும். சோல்பரி பிரபுவின் தலைமையிலான ஆணைக்குழுவால் இது உருவாக்கப்பட்டது.

வரலாறுதொகு

டொனமூர் அரசியல் யாப்பு இருக்கும் போதே சீர்திருத்தக் கோரிக்கைகள் இலங்கைத் தேசிய சங்கம் மற்றும் இலங்கை தமிழர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டன. அத்தோடு டொனமூர் யாப்பில் இருந்த குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டன. இதனால் இலங்கைக்கு 1944 இல் சோல்பரி பிரபுவின் தலைமையில் ஓர் ஆணைக்குழு இலங்கை வந்தது. இலங்கையர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கிணங்க சோல்பரி யாப்பு வெளியிடப்பட்டது. இதன் மொத்த உறுப்பினர்கள் 131.