சோழவரம் வானூர்தித் தளம்

சோழவரம் வானூர்தித் தளம் (Cholavaram Airbase) என்பது சென்னையின் சோழவரம் அருகே உள்ள பயன்படுத்தப்படாத விமான நிலையமாகும். இது முன்னதாக இரண்டாம் உலகப் போரின்போது இராயல் விமானப்படையால் ஒரு விமானத்தளமாக இயக்கப்பட்டது. போருக்குப் பிறகு, வான்வழிப் பாதை இழுவைப் பந்தயத்திற்கான இடமாக மாற்றப்படும் வரை அது கைவிடப்பட்டிருந்தது. குறிப்பிடத்தக்க நிகழ்வாக, பிரபல மலையாள நடிகர் ஜெயன் 1980 நவம்பர் 16 அன்று தனது கோலிலக்கம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது உலங்கூர்தி விபத்தில் இறந்தார்.

உள்ளூர்வாசிகளால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலங்களை இந்திய இராணுவம் பின்னர் மீட்டது. [1] [2] [3] இராணுவம் அந்தப் பகுதியையும் மீதமுள்ள வான்வழிப் பகுதியையும் ஒரு கண்காணிப்பு தளமாகப் பயன்படுத்தியது. [4] வணிக விமானங்களுக்கான விமானநிலையத்தை இரண்டாம் தரையிறங்கும் இடமாகப் பயன்படுத்தவும் திட்டங்கள் இருந்தன. [5]

உதான் திட்டத்தின் கீழ் புதிய விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்களுடன் 2020 ஆம் ஆண்டில் இந்த வான்வழிப் பாதையை இந்திய அரசு கையகப்படுத்தியது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Chennai: Land registration around Sholavaram airstrip halted". content.magicbricks.com. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  2. "IAF retrieves World War 2 era airstrip from encroachers at Sholavaram". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  3. Kabirdoss, Yogesh (August 5, 2019). "Drive to retrieve Sholavaram land uncovers WWII airstrip". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  4. Kabirdoss, Yogesh (March 11, 2019). "IAF to turn unused Sholavaram airstrip into its first east coast surveillance base". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  5. Kabirdoss, Yogesh; Ayyappan, V. (December 28, 2018). "IAF notice: Squatters near Sholavaram airstrip get IAF notice". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  6. "Sholavaram could be go-to strip as Udan flights choke Chennai airport". The Times of India (in ஆங்கிலம்). March 14, 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழவரம்_வானூர்தித்_தளம்&oldid=3099078" இலிருந்து மீள்விக்கப்பட்டது