சோழ மன்னர்களின் மெய்கீர்த்திகள்

மெய்க்கீர்த்தி என்பதன் பொருள், ஒரு மன்னனின் உண்மையான புகழுக்குரிய செயல்களைக் கூறும் கல்வெட்டின் ஒரு பகுதி ஆகும். இராசராசன் முதன் முதலில் தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அதிகார பூர்வமாகத் தெரிவித்து, நன்கு விளக்கும் மெய்க்கீர்த்திகளை தமிழ் அகவற்பாவில் தன் கல்வெட்டுகளில் பொறித்தான். இவருக்கு பிறகு இவர் வழிவந்த சோழர்களும் இதைப் பின்பற்றி கல்வெட்டுகளில் தங்களது மெய்க்கீர்த்திகளைப் பொறித்தனர்

மெய்க்கீர்த்தியின் பயன்கள் தொகு

இராசராசனைத் தொடர்ந்து வந்த சோழ மன்னர்கள் அனைவரும் தம் ஆட்சிக்கால நிகழ்வுகளையும் மெய்க்கீர்த்திகளையும் கல்வெட்டுக்களில் பொறித்தனர். இஃது ஒவ்வொரு மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் நடந்த நிகழ்வுகளையும், எந்தக் கல்வெட்டு எந்த மன்னனுடையது என வேறுபடுத்தி அறியவும் பெரிதும் உதவுகிறது.

இராசராசனின் மெய்க்கீர்த்திகள் தொகு

சில மன்னர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மெய்கீர்த்திகள் உடையவராக இருந்தனர். இராசராசன் மூன்று வித மெய்க்கீர்த்திகளை உடையவராக இருந்தாலும். வரலாற்று ஆசிரியர்களால் பெரும்பாலும் அறியப்படுவது, “““திருமகள் போல””” எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியே ஆகும்.

ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போல பெரு நிலச் செல்வியுந் தனக் கொளக் காந்தளுர்ச் சாலைக் களமறுத்தருளி வேங்கை நாடும்” வடமலை பெயர்குவை ஆயின். . . .

சோழர்களின் மெய்க்கீர்த்தி வகைகள் தொகு

 1. ”திருமகள் போல” - முதலாம் இராசராசன்
 2. ”திருமன்னி வளர” - முதலாம் இராசராசன்
 3. “திங்களோர; தருதன் தொங்கல்;” - இராஜாதி ராஜன்
 4. “திங்களோர; பெற வளர;;” - இராஜாதி ராஜன்
 5. “திருக்கொடியோடு தியாகக்கொடி” - இராஜாதி ராஜன்
 6. “திருமகளது புவியெனும்” - இரண்டாம் இராசேந்திரன்
 7. “திருமகள் மருவிய செங்கோல்” - இரண்டாம் இராசேந்திரன்
 8. “திருவளர; திரள்புயத் திருநிலவளந்” - வீரராசேந்திரன்
 9. “வீரமே துணையாக” - வீரராசேந்திரன்
 10. “திங்களோர; மலர;ந்து வெகுண்டை” - அதி ராசேந்திரன்
 11. “திருமன்னி விளங்கு” - முதலாம் குலோத்துங்கன்;
 12. “புகழ் மாது விளங்கு” - முதலாம் குலோத்துங்கன்;
 13. “புகழ் சூழ்ந்த புணரி” - முதலாம் குலோத்துங்கன்;
 14. “பூமாது புணர” - விக்கிரம சோழன்
 15. “பூமாலை மிடைந்து” - விக்கிரம சோழன்
 16. “பூமன்னு பதுமம்” - இரண்டாம் குலோத்துங்கன்;
 17. “பூமருவிய புவியேழம்” - இரண்டாம் குலோத்துங்கன்;
 18. “பூமேவி வளர;” - இரண்டாம் குலோத்துங்கன்;
 19. “பூமேவு திருமகள்” - இரண்டாம் குலோத்துங்கன்;
 20. “பூமன்னு பாவை” - இரண்டாம் குலோத்துங்கன்;
 21. “பூமன்னு பூத்த” - இரண்டாம் குலோத்துங்கன்;
 22. “பூமருவிய பொழிலேழம்” - இரண்டாம் இராசராசன்
 23. “பூமருவிய திருபொழிலேழம்” - இரண்டாம் இராசராசன்
 24. “கடல் சூழந்த பார;மாதரும்” - இரண்டாம் இராசாதிராசன்
 25. “கடல் சூழந்த பாரேழங்” - இரண்டாம் இராசாதிராசன்
 26. “புயல் பெருக வளம் பெருக” - மூன்றாம் குலோத்துங்கன்
 27. “புயல் வாய்த்து” - மூன்றாம் குலோத்துங்கன்
 28. “சீர; மன்னி இருநான்கு திசைவிளக்கு” - மூன்றாம் இராசராசன்
 29. “சீர; மன்னு மலா; மகளும்” - மூன்றாம் இராசராசன்
 30. “பூமியும் திருவும்” - மூன்றாம் இராசேந்திரன்
 31. “பூமருவிய திருமடந்தை” - மூன்றாம் இராசேந்திரன்

மேற்கோள்கள் தொகு

இராசராசன் துணுக்குகள் நூறு - பக்கம் 4, 5 “தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியீடு” [1]

 1. "சோழர்கள்". https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D. பார்த்த நாள்: 27 சூன் 2017.