சோவனூர் புதை குகை
கேரளத்தில் உள்ள குகை
சோவனூர் புதை குகை (Chovvanur burial cave) என்பது கேரளத்தின், திருச்சூர் மாவட்டம் சோவனூரில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுக்கு முந்தைய பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பாறையில் வெட்டி அமைக்கபட்ட குகை ஆகும். இந்த குகைக்குள் நுழைய ஒற்றை நுழைவாயில் உள்ளது. குகை அறையானது வட்டமாக உள்ளது. ஒற்றை அறை கொண்ட குகையில் இரண்டு திண்ணைகள் உள்ளன. இந்திய தொல்லியல் துறையானது இந்தக் குகையை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளது.[1] [2]
குறிப்புகள் தொகு
- ↑ "Alphabetical List of Monuments - Kerala". ASI இம் மூலத்தில் இருந்து 2011-11-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111103191806/http://asi.nic.in/asi_monu_alphalist_kerala.asp.
- ↑ "BURIAL CAVE (CHOWANNUR)". ASI Thrissur இம் மூலத்தில் இருந்து 2013-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130604234200/http://www.asithrissurcircle.in/Monuments.html.