சோ. உ. எதிர்மன்னசிங்கம்

சோமசுந்தரம் உடையார் எதிர்மன்னசிங்கம் (Somasunderam Udayar Ethirmanasingham, சூலை 25, 1915 - ) இலங்கைத் தமிழ் தொழிலதிபரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

எஸ். யூ. எதிர்மன்னசிங்கம்
S. U. Ethirmanasingham

நாஉ
பட்டிருப்பு தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1947–1952
பின்வந்தவர் சி. மூ. இராசமாணிக்கம்
பதவியில்
1956–1960
முன்னவர் சி. மூ. இராசமாணிக்கம்
பின்வந்தவர் சி. மூ. இராசமாணிக்கம்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 25, 1915(1915-07-25)
இலங்கை இலங்கைத் தமிழர்

ஆரம்ப வாழ்க்கைதொகு

எதிர்மன்னசிங்கம் 1915 சூலை 25 இல் பிறந்தவர்.[1] இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர். சென் மேரீஸ் கல்லூரி, கல்முனை உவெசுலி கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[2] இவரது உடன்பிறந்தவரான சோ. தம்பிராஜா பட்டிருப்புத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 1970-77 வரை இருந்தவர்.

அரசியலில்தொகு

எதிர்மன்னசிங்கம் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக பட்டிருப்புத் தொகுதியில் போட்டியிட்டு 900 வாக்குகளால் சுயேட்சையாகப் போட்டியிட்ட இராசமாணிக்கத்தை வென்று நாடாளுமன்றம் சென்றார்.[3] 1952 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு சுயேட்சையாகப் போட்டியிட்ட சி. மூ. இராசமாணிக்கத்திடம் தோற்றார்.[4] ஆனாலும், 1956 தேர்தலில் மீண்டும் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5] மார்ச் 1960 தேர்தலில் இராசமாணிக்கத்திடம் தோற்றார்.[6] சூலை 1960, 1965 தேர்தல்களிலும் இவர் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[7][8]

மேற்கோள்கள்தொகு

  1. "Ethirmanasingham, Somasunderam Udayar". இலங்கை நாடாளுமன்றம்.
  2. Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 53. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon. 
  3. "Result of Parliamentary General Election 1947". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  4. "Result of Parliamentary General Election 1952". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  5. "Result of Parliamentary General Election 1956". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  6. "Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  7. "Result of Parliamentary General Election 1960-07-20". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  8. "Result of Parliamentary General Election 1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.