சோ பில்கர்
சோ பில்கர் (Zoe Pilger ) (பிறப்பு 1984) ஓர் ஆங்கில எழுத்தாளரும் மற்றும் கலை விமர்சகரும் ஆவார். இவரது முதல் புதினமான ஈட் மை ஹார்ட் அவுட், பெட்டி திசாசுக் விருதையும் சோமர்செட் மாம் விருதையும் வென்றது.[1]
சோ பில்கர் | |
---|---|
பிறப்பு | 1984 இலண்டன், இங்கிலாந்து |
குறிப்பிடத்தக்க படைப்பு | ஈட் மை ஹார்ட் அவுட் |
குடும்பத்தினர் | ஜான் பில்கர் (தந்தை) இவோன் ராபர்ட்சு (mother) |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்
தொகுபத்திரிக்கையாளர்களான ஜான் பில்கர் மற்றும் இவோன் ராபர்ட்சு ஆகியோரின் மகளான,[2] கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் சமூகம் மற்றும் அரசியல் அறிவியல் படித்தார்.[3] இவர் இலண்டன் பல்கலைக்கழகத்தின் ஒப்பீட்டு இலக்கியத்தில் முதுகலை பட்டமும் பெற்றார்.[1]
சோ பில்கர் ஜனவரி 2012 முதல் 2016 வரை தி இன்டிபென்டன்ட் என்ற பிரிட்டன் செய்தித்தாளின் கலை விமர்சகராக இருந்தார்.[4][5] இவரது முதல் புதினமான ஈட் மை ஹார்ட் அவுட், 2014 இல் சர்ப்பண்ட்ஸ் டெயில் வெளியிட்டது. இது நவீன காதல் பற்றிய பின்நவீன பெண்ணிய நையாண்டி என்று விவரிக்கப்பட்டுள்ளது.[6] தனது 23 வயதில் தனக்கு அறிமுகமில்லாத கடலோர நகரத்தில் வாழ்ந்த காலத்தில் இது உருவாக்கப்பட்டது.[7]
இவர் பெண் கலைஞர்களின் படைப்புகளில் காதல் மற்றும் பாலியலில் துன்பத்தை ஏற்படுத்தி இன்பம் அடைதல் குறித்து ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்.[8] பில்கர் தற்போது இலண்டனில் வசிக்கிறார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Bio". zoe-pilger. Archived from the original on 14 August 2022. பார்க்கப்பட்ட நாள் 11 January 2020.
- ↑ "John Pilger: writer of wrongs". Scotsman. Archived from the original on 22 June 2023. பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
- ↑ Hoggard, Liz; Jones, Corinne; Lewis, Tim; Kellaway, Kate (12 January 2014). "Meet the debut authors of 2014". The Observer இம் மூலத்தில் இருந்து 29 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230329183726/https://www.theguardian.com/books/2014/jan/12/debut-authors-2014-observer-fiction.
- ↑ Wood, Felicity (5 November 2013). "Zoe Pilger: interview". The Bookseller இம் மூலத்தில் இருந்து 1 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210801210539/https://www.thebookseller.com/profile/zoe-pilger-interview.
- ↑ "The Independent". Zoe Pilger. Archived from the original on 20 May 2022. பார்க்கப்பட்ட நாள் 11 January 2020.
- ↑ Scholes, Lucy (19 February 2014). "The enthusiasms of Zoe Pilger". Bookanista. Archived from the original on 3 December 2022. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.
- ↑ "The Pen Ten With Zoe Pilger". PEN America. 2 May 2015 இம் மூலத்தில் இருந்து 2 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221002234119/https://pen.org/the-pen-ten-with-zoe-pilger/.
- ↑ "Zoe Pilger". The Independent. Archived from the original on 7 May 2022. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.