இவோன் ராபர்ட்சு
இவோன் ராபர்ட்சு ( Yvonne Roberts ) (பிறப்பு 1948) ஓர் ஆங்கில பத்திரிகையாளர் ஆவார்.
சுயசரிதை
தொகுஇவர் பக்கிங்காசையரில் உள்ள நியூபோர்ட் பேக்னெலில் பிறந்தார். இவரது சிறுவயதிலேயே இவரது குடும்பம் மாட்ரிட்டுக்கு குடிபெயர்ந்தது. அங்கு இவர் தனது குழந்தைப் பருவம் முழுவதும் பல இடங்களில் வாழ்ந்தார். [1] இவோன், 1967 மற்றும் 1969 க்கு இடையில் வார்விக் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். [2] வரலாற்றாசிரியர் இ. பி. தாம்சன் அவர்களிடமும் கல்வி கற்றார். [3]
தொழில் வாழ்க்கை
தொகு1969 இல் நார்தாம்ப்டன் குரோனிக்கிள் & எக்கோ [4] என்ற பத்திரிக்கை மூலம் பத்திரிகைத் துறையில் இவரது வாழ்க்கை தொடங்கியது. இது 1971 வரை வெளியீட்டில் இருந்தது.
இவோன், வீக்கெண்ட் வேர்ல்ட் (1972-77), தி லண்டன் ப்ரோகிராம் (1977-79) மற்றும் 1988 இலிருந்து திஸ் வீக் போன்ற பத்திரிக்கைகளில் பணிபுரிந்தார். மேலும், சிலகாலமே வெளிவந்த நியூஸ் ஆன் சண்டே என்ற பத்திரிக்கையிலும் பணிபுரிந்தார். மேலும் தி டைம்ஸ், ஈவினிங் ஸ்டாண்டர்ட், நியூ ஸ்டேட்ஸ்மேன் மற்றும் தி இன்டிபென்டன்ட் ஆகியவற்றிலும் பங்களித்துள்ளார். தான் முன்னணி எழுத்தாளராகப் பணியாற்றிய தி அப்சர்வர் என்ற நாளேடில் 1990 இல் சேர்ந்தார். . [4] இவோன் ராபர்ட்சு யங் அறக்கட்டளையின் மூத்த சக ஊழியர். [4]
குடும்பம்
தொகுபத்திரிகையாளர் ஜான் பில்கருடன் முன்னர் இருந்த உறவின் மூலம் இவருக்கு சோ பில்கர் (பிறப்பு 1984), என்ற மகள் பிறந்தார். [5] பின்னர், இசுடீவன் இசுகாட் என்பவருடனான திருமணம் மூலம் கிரேஸசு இசுகாட் என்ற மகள் பிறந்தார். இவரது கணவர் பல ஆண்டுகளாக பிபிசியின் பனோரமாவில் தயாரிப்பாளராக இருந்தார். 2016-17 இல், இவர் சசெக்சு பல்கலைக்கழகத்தில் முதல் அரசியல் எழுத்தாளராக இருந்தார். [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Interview with Yvonne Roberts". https://www.timeshighereducation.com/people/interview-yvonne-roberts-university-of-sussex.
- ↑ The Encyclopedia of the British Press 1422–1992. Macmillan.
- ↑ "Selling well or just selling out?". https://www.independent.co.uk/life-style/selling-well-or-just-selling-out-ruth-picardie-meets-yvonne-roberts-a-leftwing-feminist-who-has-just-penned-a-sexy-blockbuster-1383660.html.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Yvonne Roberts". The Young Foundation. பார்க்கப்பட்ட நாள் 19 September 2017.
- ↑ "John Pilger: writer of wrongs". 1 July 2006. http://www.scotsman.com/news/john-pilger-writer-of-wrongs-1-1124926.