ஜான் பில்கர்
ஜான் ரிச்சர்ட் பில்கர் ( John Richard Pilger ) 9 அக்டோபர் 1939 - 30 டிசம்பர் 2023) ஓர் ஆத்திரேலியப் பத்திரிகையாளரும், எழுத்தாளரும், அறிஞரும் மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.[1] 1962 முதல், இவர் முக்கியமாக பிரிட்டனில் இருந்தார்.[2][3][4] நியூயார்க்கில் உள்ள கோர்னெல் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகவும் இருந்தார்.[5]
ஜான் பில்கர் | |
---|---|
2011இல் ஜான் பில்கர் | |
பிறப்பு | பான்டி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா | 9 அக்டோபர் 1939
இறப்பு | 30 திசம்பர் 2023 இலண்டன், இங்கிலாந்து | (அகவை 84)
தேசியம் |
|
கல்வி | சிட்னி ஆண்கள் உயர்நிலைப் பள்ளி |
பணி |
|
துணைவர் | இவோன் ராபர்ட்சு |
வாழ்க்கைத் துணை | இசுகார்த் பிளெட் |
பிள்ளைகள் | சோ பில்கர் உட்பட இருவர் |
விருதுகள் | Full list |
வலைத்தளம் | |
Official website |
பில்கர் அமெரிக்க, ஆத்திரேலிய மற்றும் பிரிட்டிசு வெளியுறவுக் கொள்கையை விமர்சித்தவர். அது ஏகாதிபத்திய மற்றும் காலனித்துவ நிகழ்ச்சி நிரலால் இயக்கப்படுவதாக இவர் கருதினார். ஆத்திரேலியப் பழங்குடிகளை தனது சொந்த நாட்டில் நடத்துவதை இவர் விமர்சித்தார். கம்போடிய இனப்படுகொலை பற்றிய அறிக்கைகளுக்காக இவர் முதலில் சர்வதேச கவனத்தை ஈர்த்தார்.[6]
சொந்த வாழ்க்கை
தொகுபில்கர், மருத்துவரும் மற்றும் புவியியலாளருமான சர் ஜான் சுமித் பிளெட் என்பரின் பேத்தியான பத்திரிகையாளர் இசுகார்த் பிளெட் என்பவரை மணந்தார்.[7] இவர்களுக்கு சாம் என்ற ஒரு மகன் 1973 இல் பிறந்தார். சாம் ஒரு விளையாட்டு சார்பான எழுத்தாளர் ஆவார். பில்கருக்கு பத்திரிக்கையாளர் இவோன் ராபர்ட்சு என்பவர் மூலம் ஜோ பில்கர் என்ற ஒரு மகளும் 1984 இல் பிறந்தார்.[8] ஜோ ஒரு எழுத்தாளர் மற்றும் கலை விமர்சகராக இருக்கிறார்.
தொழில் வாழ்க்கை
தொகுஒரு ஆவணப்படத் தயாரிப்பாளராக பில்கரின் வாழ்க்கையானது தி க்வைட் மியூட்டினி (1970) என்ற படத்தில் தொடங்கியது. இது இவர் வியட்நாமுக்குச் சென்றபோது தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு 50 க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களுடன் தொடர்ந்தது. கம்போடியாவில் கெமர் ரூச் ஆட்சியாளர் போல் பாட் ஆட்சியின் பின்விளைவுகள் பற்றிய இயர் ஜீரோ (1979), மற்றும் டெத் ஆஃப் எ நேஷன்: தி திமோர் பிளாட் (1993) ஆகியவை இதே போன்ற ஆவணப் படைப்புகள் ஆகும். பூர்வீக ஆத்திரேலியர்கள் பற்றிய இவரது பல ஆவணப் படங்களில் தி சீக்ரெட் கன்ட்ரி (1985) மற்றும் உட்டோபியா (2013) ஆகியவையும் அடங்கும். பிரித்தனின் டெய்லி மிரர் என்ற அச்சு ஊடகத்தில், பில்கர் 1963 முதல் 1986 வரை பணிபுரிந்தார்,[9] 1991 முதல் 2014 வரை நியூ ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையிலும் வழக்கமாக கட்டுரை எழுதினார்.
பில்கர் 1967 மற்றும் 1979 இல் பிரிட்டனின் சிறந்த பத்திரிகையாளர் விருதை வென்றார். இவரது ஆவணப்படங்கள் பிரிட்டன் மற்றும் உலகளவில் பிரிட்டன் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அகாதமி விருது[9] உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளன.
இறப்பு
தொகுபில்கர் 30 டிசம்பர் 2023 அன்று இலண்டனில் நுரையீரல் பாதிப்பு காரணமாக தனது 84 வயதில் இறந்தார்.[10][11]
கௌரவம்
தொகுபிரித்தானிய நூலகத்தில் ஜான் பில்கரின் காப்பகம் உள்ளது.[12]
உசாத்துணை
தொகு
|
|
மேற்கோள்கள்
தொகு- ↑ Buckmaster, Luke (12 November 2013). "John Pilger's Utopia: an Australian film for British eyes first" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
- ↑ [1] Andrei Markovits and Jeff Weintraub, "Obama and the Progressives: A Curious Paradox", The Huffington Post, 28 May 2008
- ↑ Sutton, Candace (1 March 2013). "Aboriginal squalor among Australia's 'dirtiest secrets' says expat". The Australian.
- ↑ "BFI Screenonline: Pilger, John (1939–) Biography".
- ↑ "As the election closes in, John Pilger denounces Americanism". பார்க்கப்பட்ட நாள் 23 July 2021.
- ↑ Maslin, Janet (29 April 1983). "Film: Two Perceptions of the Khmer Rouge". The New York Times. https://www.nytimes.com/1983/04/29/movies/film-two-perceptions-of-the-khmer-rouge.html.
- ↑ Sir John Smith Flett KBE, FRS www.rousayroots.com accessed 14 February 2022
- ↑ "John Pilger: writer of wrongs". http://www.scotsman.com/news/john-pilger-writer-of-wrongs-1-1124926.
- ↑ 9.0 9.1 Biography page, Pilger's official website.
- ↑ "John Pilger: Journalist, campaigner and documentary maker dies aged 84". Sky News. 31 December 2023. https://news.sky.com/story/john-pilger-journalist-campaigner-and-documentary-maker-dies-aged-84-13040032. பார்த்த நாள்: 1 January 2024.
- ↑ "John Pilger obituary". தி கார்டியன். 1 January 2024. https://www.theguardian.com/media/2024/jan/01/john-pilger-obituary. பார்த்த நாள்: 1 January 2024.
- ↑ John Pilger Archive[தொடர்பிழந்த இணைப்பு], archives and manuscripts catalogue, the British Library. Retrieved 15 May 2020