சௌந்தர்யா பால நந்தகுமார்
சௌந்தர்யா பால நந்தகுமார் (Soundarya Bala Nandakumar) ஓர் இந்திய பாடகியும், நடிகையுமாவார். இவர் பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடரில் ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
சௌந்தர்யா பால நந்தகுமார் | |
---|---|
மற்ற பெயர்கள் | சௌந்தர்யா நந்தகுமார் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2010 – தற்போது வரை |
அறியப்படுவது | பகல் நிலவு |
தொழில்
தொகு2010ஆம் ஆண்டில், சௌந்தர்யா சூப்பர் சிங்கர் 3இல் போட்டியாளராகத் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.[1] [2] 6 மெழுகுவத்திகள் (2013) என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். [3] 2015ஆம் ஆண்டில் ஒளிப்பரப்பப்பான பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடரில் முன்னணி நடிகைகளில் ஒருவராக அறிமுகமானார். தொடரின் தயாரிப்பாளர்கள் சூப்பர் சிங்கரில் இவரது நடிப்பைக் கண்டனர். இந்தத் தொடரில் ரேவதி என்ற பாத்திரத்திற்காக இவர் பாராட்டுகளைப் பெற்றார். இது கிட்டத்தட்ட 700 அத்தியாயங்கள் ஒளிப்பரப்பப்பட்டது.[1] [2] [4] [5] [6] 2016ஆம் ஆண்டில், இவர் சூப்பர் சிங்கர் 5 மினி தொடரில் பங்கேற்றார். [7] சௌந்தர்யா கபாலி (2016) படத்தில் இடம்பெற்ற "அவதாரம் படத்தில் இடம் பெற்ற "தென்றல் வந்து" என்ற பாடலை பாடினார். இவர் முன்பு இந்தப் பாடலை சூப்பர் சிங்கரில் பாடியிருந்தார்.[8] இவரது அடுத்த பாடல் கொடிவீரனில் "களவாணி" என்ற பாடலாகும். இப்படலை இவர் விவி பிரசன்னாவுடன் இணைந்து பாடினார். டைம்ஸ் ஆஃப் இந்தியா படத்தின் ஒலிப்பதிவைப்பற்றிய விமர்சனத்தில், "ஒரு நாட்டுப்புற பாடலில் பிரசன்னாவும் சௌந்தர்யாவும் பிரகாசிக்கின்றனர்" என்று எழுதியது.[9] இவர் பின்னர் விக்னேஷ் கார்த்திக் உடன் நடித்தார்.[10] 2021இல் வெளியான மாஸ்டர் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார்.[8]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Chennai Times 15 Most Desirable Women on Television 2017 - Times of India". The Times of India. 15 May 2018.
- ↑ 2.0 2.1 "Soundarya Bala Nandakumar shares an old pic of a thinner self, asks everyone to not body shame - Times of India". The Times of India. 10 June 2019.
- ↑ Vasudevan, K. V. (28 February 2017). "Small screen joys". The Hindu.
- ↑ "TV Serial Pagal Nilavu comes to an end - Times of India". The Times of India. 11 March 2019.
- ↑ "Pagal Nilavu crosses 500 episodes - Times of India". The Times of India. 26 March 2018.
- ↑ " 'பகல் நிலவி'லிருந்து நானும் விக்னேஷும் ஏன் விலகினோம்?" - விளக்கும் செளந்தர்யா [Why did Vignesh and I leave Pagal Nilavu - Soundarya explains]". Vikatan. 27 November 2018.
- ↑ CR, Sharanya (14 May 2016). "I am taking my acting career slow: Soundarya - Times of India". The Times of India.
- ↑ 8.0 8.1 CR, Sharanya (17 November 2019). "It feels surreal to act with Thalapathy: Soundarya Nandakumar - Times of India". The Times of India.
- ↑ CR, Sharanya (18 November 2017). "Music Review: Kodiveeran - Times of India". The Times of India.
- ↑ "Singer Soundarya urges people not to abandon dogs during #CoronaCrisis - Times of India". The Times of India. 30 March 2020.