சௌமகல்லா அரண்மனை

சௌமகல்லா அரண்மனை அல்லது நான்கு அரண்மனைகள் (Chowmahalla Palace) ஆசாப் அலி வம்சத்தின் ஐதராபாத் நிசாம் மன்னர் கட்டிய நான்கு அரண்மனைகள் ஆகும்.

சௌமகல்லா அரண்மனை
Map
பொதுவான தகவல்கள்
வகைஅரசவை
இடம்ஹைதராபாத், தெலங்கானா, இந்தியா
நிறைவுற்றது1880

இந்த நான்கு அரண்மனைகளும் ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் அருகே அமைந்துள்ளது. ஐதராபாத் நிசாம் அசாப் உத்-தௌலா மீர் சலாபத் ஜங் என்பவரால் இவ்வரண்மனைகள் 1750-இல் கட்டத் துவங்கப்பட்டது.[1]அப்சல் உத்-தௌலா மற்றும் ஐந்தாம் அசப் ஜா ஆட்சிக் காலத்தில் முறையே 1857 மற்றும் 1869-ஆம் ஆண்டுகளில் நிறைவுற்றது.

45 ஏக்கர் பரப்பளவு கொண்ட இவ்வரண்மனை இரண்டு தர்பார் கூடங்கள் மற்றும் இரண்டு தாழ்வாரங்களுடன் கூடியது. மேலும் கூட்ட அரங்குகள், நீரூற்றுகள், தோட்டங்களுடன் கூடியது. இந்த சௌமகல்லா அரண்மனைகளுக்கு, 15 மார்ச் 2010-இல் யுனெஸ்கோ நிறுவனத்தால் பாரம்பரிய பண்பாட்டு தலமாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.[2][3]

படக்காட்சிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. forgeten. பார்க்கப்பட்ட நாள் 4 April 2013.
  2. [1]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-30. பார்க்கப்பட்ட நாள் 2017-01-03.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌமகல்லா_அரண்மனை&oldid=3556368" இலிருந்து மீள்விக்கப்பட்டது