சௌராட்டிரா கல்லூரி, மதுரை
சௌராட்டிரா கல்லூரி, மதுரை (Sourashtra College, Madurai) என்பது தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், பசுமலையில் அமைந்துள்ள கல்லூரியைக் குறிக்கிறது. இது 1967-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற கல்லூரியாகச் செயல்படுகிறது.[1][2] கல்லூரியில் கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன.
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1967 |
அமைவிடம் | மதுரை மாவட்டம், பசுமலை , , |
வளாகம் | நகர்புறம் |
சேர்ப்பு | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.sourashtracollege.in/ |
துறைகள்
தொகுஅறிவியல்
தொகுகலை மற்றும் வணிகவியல்
தொகுமுதுகலை மற்றும் ஆய்வுப் படிப்புகள்
தொகு1981 ஆம் ஆண்டு முதல் முதுகலை பட்டமேற்படிப்புகள் இங்கு துவங்கின. ஆண்கள் மட்டும் பயிலும் இக்கல்லூரியில் 1984-ஆம் ஆண்டு முதல் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 2005-ஆம் ஆண்டு முதல் வணிகவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் ஆய்வியல் நிறைஞர் படிப்புகளும் மற்றும் வணிகவியல் பாடத்தில் முனைவர் பட்டப் படிப்பும் துவங்கியது. 2011-ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரிக்கு தன்னாட்சி அதிகாரம் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்டது. 1993-ஆம் ஆண்டு முதல் சுயநிதி படிப்புகள் இக்கல்லூரி வளாகத்தில் தனியாக தொடங்கப்பட்டன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சௌராஷ்டிரா கல்லூரி விளையாட்டு விழா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-madurai/2011/mar/29/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-332443.html. பார்த்த நாள்: 21 May 2023.
- ↑ "Affiliated College of Madurai Kamaraj University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-08.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|3=
(help)
புற இணைப்புகள்
தொகு- "Sourashtra College". sourashtracollege.in. Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2017-09-20.