ச. கு. கார்வேந்தன்
இந்திய அரசியல்வாதி
ச. கு. கார்வேந்தன் (S.K. Kharventhan, பிறப்பு: 10 மே 1948) இந்திய அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் வழக்கறிஞர் ஆவார். 1996 முதல் 1998 வரை தமிழ் மாநில காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (பதினோராவது மக்களவை), 2004 முதல் 2009 வரை இந்தியத் தேசிய காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (பதினான்காவது மக்களவை) இருந்தார்.[1] 14 ஆவது மக்களவையில் விவாதங்களில் சிறப்பாகப் பங்கேற்ற மூவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[2]
ச. கு. கார்வேந்தன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | பழனி மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 மே 1948 தாராபுரம், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | ச. கு. வெண்மதி |
வாழிடம் | தாராபுரம் |
As of 22 செப்டம்பர், 2006 மூலம்: [1] |
வகித்த பதவிகள்
தொகு- தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினராக ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார்.
- அனைத்து இந்திய பார் கவுன்சில் தலைவராக இருந்தார்.
- இந்திய சட்டக் கல்வி மேம்பாட்டுக்கு தேசிய விருது பெற்றார்.
- வழக்கறிஞர் தொழிலில் வாணாள் சாதனை விருது பெற்றார்.
நூலாசிரியராக
தொகுசமூக நீதி என்ற பெயரில் ஒரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலை தாராபுரம் எஸ் கே கே அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kharventhan,Shri Salarapatty Kuppusamy". Lok Sabha. Archived from the original on 17 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 May 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ S K Kharventhan - a top performer in 14th Lok Sabha