ஜஃபராபாதி எருமை

ஜஃபராபாதி எருமை (Jafarabadi buffalo) என்பது இந்தியாவின் குஜராத்தில் தோன்றிய ஒரு நதிக்கரையோர எருமை ஆகும்.[1] உலகில் சுமார் 25,000 ஜஃபராபாதி எருமைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[2] இது இந்தியா மற்றும் பாகிஸ்தானின் முக்கியமான எருமை இனங்களில் ஒன்றாகும்.[3] ஜஃபராபாடி எருமை பரணிடப்பட்டது 2020-10-22 at the வந்தவழி இயந்திரம் பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முதல் எருமை இனமாகும்.[4] மேலும் இது 2017ஆம் ஆண்டு நிலவரப்படி பிரேசிலில் வளர்க்கப்பட்ட நான்கு எருமை இனங்களில் ஒன்றாகும். மற்றவை மத்திய தரைக்கடல், முர்ரா மற்றும் சதுப்பு எருமை.[5]

ஜஃபராபாத் எருமை ஆப்பிரிக்க கேப் எருமை மற்றும் இந்திய நீர் எருமை ஆகியவற்றின் கலப்பினமாகும் என்று இந்திய தேசிய அறிவியல் ஆவண மையம் கூறுகிறது. முன்னது உணவுக்காகப் பிரித்தானியாவின் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. எருமையின் விந்து தரம் குறைவாக இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்று குறிப்பிடுகிறது. கலப்பின எருமைகள் ஜஃபராபாத்தில் பரவலாக இருந்தன, எனவே இவை ஜஃபராபாதி எருமை என்று பெயரிடப்பட்டன.[6] ஜஃபராபாதி எருமைகள் மிகவும் பெரிய, அடர்த்தியான, தட்டையான கொம்புகளைக் கொண்ட கனமான தலைகளைக் கொண்டுள்ளன இவற்றின் கழுத்தின் பக்கங்களில் இறங்கிய காதுகள் மேல்நோக்கி செல்கின்றன.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Presicce, Giorgio A. (31 March 2017). The Buffalo (Bubalus bubalis) - Production and Research. Bentham Science Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781681084176.
  2. Rife, David Cecil (1959). The water buffalo of India and Pakistan. International Cooperation Administration.
  3. Falvey, Lindsay (1 January 1999). Smallholder Dairying in the Tropics. ILRI (aka ILCA and ILRAD). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780734014320.
  4. Porter, Valerie (9 March 2016). Mason's World Encyclopedia of Livestock Breeds and Breeding, 2 Volume Pack. CABI. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781845934668.
  5. Pylro, Victor (21 September 2017). The Brazilian Microbiome: Current Status and Perspectives. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783319599977.
  6. "Indian Science Abstracts". Indian National Scientific Documentation Centre. 2006. p. 156.
  7. Cattle and Buffalo Meat Production in the Tropics. Longman Scientific & Technical. p. 41-44.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஃபராபாதி_எருமை&oldid=3845103" இலிருந்து மீள்விக்கப்பட்டது