ஜகாங்கீர் மகால், ஓர்ச்சா
ஜகாங்கீர் மகால் (Jahangir Mahal, Orchha) ( ஜகாங்கீரின் கோட்டை, ஓர்ச்சா அரண்மனை, மகால்-இ-ஜகாங்கிர் ஓர்ச்சா எனவும் அறியப்படுகிறது ) இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓர்ச்சாவில் அமைந்துள்ள ஒரு கோட்டையும் , பாதுகாப்பு அரணுமாகும்.[1][2]
ஜகாங்கீர் மகால் | |
---|---|
வகை | அரண்மனை |
சொற்பிறப்பு | ஜஹாங்கீர் |
அமைவிடம் | ஓர்ச்சா, மத்தியப் பிரதேசம் |
கட்டப்பட்டது | பொது ஊழி 17ஆம் நூற்றாண்டு |
வரலாறு
தொகுஜகாங்கீர் மகால், கிபி 17 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது. இப்பகுதியின் ஆட்சியாளர் வீர் சிங் தேவ் முகலாய பேரரசர் ஜஹாங்கீரின் வருகையின் போது அவரை அன்பாக வரவேற்பதற்காக இது கட்டப்பட்டது. அரண்மனையின் நுழைவாயில் ஒரு கலை மற்றும் பாரம்பரிய அமைப்பால் கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் முன் சுவர் கிழக்கு நோக்கி உள்ளது. மேலும் ஓடுகளால் மூடப்பட்டுள்ளது. இது மூன்று மாடிகளைக் கொண்ட அமைப்பாகும். இதில் அழகாக தொங்கும் பால்கனிகள், தாழ்வாரங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது.[3]
ஜகாங்கீர் மகாலின் குவிமாடங்கள், தைமூர் பாணியில் கட்டப்பட்டுள்ளன. அதன் பிரமாண்டமான வாயிகள் ஒரு போர் யானை நுழையும் அளவுக்கு பெரியவை. மேலும் அதன் உச்சியில் பீரங்கிகளை வைக்குமளவுக்கு உயரமானவவை.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Kumar, Arjun (2009-09-20). "Discovery of monuments at Orchha - The Economic Times". Economictimes.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2017-01-22.
- ↑ "Jounior Observer | Sunday Observer.lk - Sri Lanka". www.sundayobserver.lk. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
- ↑ "Jahangir Mahal Orchha". Liveindia.com. Archived from the original on 9 June 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-01-22.
உசாத்துணை
தொகு- "Orchha Town". The Imperial Gazetteer of India, Vol. 19. Oxford at Clarendon Press. 1909. pp. 247–248.
- "Orchha State". The Imperial Gazetteer of India, Vol. 19. Oxford at Clarendon Press. 1909. pp. 241–247.