சனநாயக மக்கள் விடுதலை முன்னணி

(ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (Democratic People's Liberation Front, DPLF) என்பது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி ஆகும். இது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அரசியல் பிரிவாகும். இக்கட்சி 1988 இல் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தலைவராக தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி
Democratic People's Liberation Front
செயலாளர்எஸ். சதானந்தன்
தொடக்கம்1988
தலைமையகம்16 ஏக் வீதி, பம்பலப்பிட்டி, கொழும்பு 4
கூட்டணிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
1 / 225
தேர்தல் சின்னம்
நங்கூரம்
இலங்கை அரசியல்

சனநாயக மக்கள் விடுதலை முன்னணி வன்னி மாவட்டத்தில் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 3 இடங்களைக் கைப்பற்றியது.[1] 2000 தேர்தலில் இக்கட்சி எந்த இடத்தையும் பெறவில்லை.[2] 2001 தேர்தலில் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மட்டுமே வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] 2004,[4][5] 2010[6] தேர்தல்களில் எவரும் வெற்றி பெறவில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. "Result of Parliamentary General Election 1994" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-08-20.
  2. "Result of Parliamentary General Election 2000". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2010-08-26. பார்க்கப்பட்ட நாள் 2015-08-20.
  3. "General Election 2001 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-08-20.
  4. "Parliamentary General Election 2004 Final District Results - Vanni District". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-20.
  5. "General Election 2004 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-08-20.
  6. "Parliamentary General Election - 2010 Vanni District". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2010-04-14. பார்க்கப்பட்ட நாள் 2015-08-20.