ஜனமத்தி அனுமத் சாத்திரி

தெலுங்கு எழுத்தாளர்

முனைவர் ஜனமத்தி அனுமத் சாத்திரி (Janamaddi Hanumath Sastri) (1926-2014) ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பாவைச் சேர்ந்த ஒரு இந்திய எழுத்தாளரும் மொழியியலாளரும் ஆவார். [1] தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ள இவர் கடப்பா எழுத்தாளர்கள் அமைப்பில் நான்கு தசாப்தங்களாக பணியாற்றினார். மேலும், அங்கு சார்லசு பிலிப் பிரௌன் நினைவு நூலகத்தையும் நிறுவினார். இவரது பிரவுன் பற்றிய விரிவான ஆராய்ச்சிக்காக ஞானபீட விருது பெற்ற சி. நாராயண ரெட்டி இவரை பிரவுன் சாஸ்திரி என்று அன்புடன் அழைத்தார். [2]

இவர் அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள இராயதுர்கத்தில் சுப்பண்ணா, ஜனகம்மா தம்பதியருக்கு 1926 இல் பிறந்தார். [2] 1946 ஆம் ஆண்டு பெல்லாரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

எழுத்துகள்

தொகு

சாத்திரி பல்வேறு செய்தித்தாள்கள் மற்றும் வெளியீடுகளில் 2,500 கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும், 16 புத்தகங்களையும் எழுதியுள்ளார். குறிப்பிடத்தக்க படைப்புகளில் சி. பி. பிரவுன், மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா, பெல்லாரி ராகவா ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் அடங்கும். [1]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Janamaddi passes away". HMTV. பார்க்கப்பட்ட நாள் 17 August 2016.
  2. 2.0 2.1 "'బ్రౌన్ శాస్త్రి' జానమద్ది కన్నుమూత". Jagati Publications. பார்க்கப்பட்ட நாள் 17 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனமத்தி_அனுமத்_சாத்திரி&oldid=3814706" இலிருந்து மீள்விக்கப்பட்டது