இராயதுர்கம்

ஆந்திராவிலுள்ள ஒரு நகரம்

'இராயதுர்கம் (Rayadurgam) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது ஒரு நகராட்சி மன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இராயதுர்கம் துணிப் பொருட்கள் மற்றும் உற்பத்தி தொழிலுக்கு பெயர் பெற்றது. ஐதராபாத்திலிருந்து சுமார் 451.6 கிமீ (280.6 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இப்போது முறையான போக்குவரத்து, நவீன வசதிகளுடன் மெல்ல வளர்ச்சியடைந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை 544DD மூலம் நகரம் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவின் பிற நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள பல்லாரி விமான நிலையம் இதன் அருகிலுள்ளது. அதைத் தொடர்ந்து கர்னூல், புட்டபர்த்தி மற்றும் பெங்களூரு நகரங்களும் அருகில் உள்ளது. பெல்லாரி, குண்டக்கல், கூட்டி மற்றும் அனந்தபூர் போன்ற முக்கிய நிலையங்களுடன் இராயதுர்கம் ஒரு தொடர்வண்டி நிலையத்தையும் கொண்டுள்ளது.[3]

இராயதுர்கம்
நகரம்
இராயபுரம் கோயில்
இராயபுரம் கோயில்
இராயதுர்கம் is located in ஆந்திரப் பிரதேசம்
இராயதுர்கம்
இராயதுர்கம்
ஆந்திராவில் இராயபுரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 14°42′00″N 76°52′00″E / 14.7000°N 76.8667°E / 14.7000; 76.8667
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
Districtஅனந்தபூர்
பரப்பளவு
 • மொத்தம்49.73 km2 (19.20 sq mi)
ஏற்றம்
543 m (1,781 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்61,749
 • அடர்த்தி1,200/km2 (3,200/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
515 865
தொலைபேசி இணைப்பு எண்+91–8495
இணையதளம்rayadurg.cdma.ap.gov.in/en

மக்கள்தொகை

தொகு

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, நகரத்தின் மக்கள் தொகை 61,749 பேர். மொத்த மக்கள் தொகையில், 0–6 வயதுக்குட்பட்ட 30,911 ஆண்கள், 30,838 பெண்கள் மற்றும் 7,462 குழந்தைகள் என உள்ளனர். சராசரி கல்வியறிவு விகிதம் 69.60% ஆக உள்ளது. 37,781 கல்வியறிவு பெற்றவர்கள், தேசிய சராசரியான 73.00% ஐ விட கணிசமாகக் குறைவு.[4] நகரில் தெலுங்கு ஆட்சி மொழியாகும். கன்னடம் மற்றும் உருது மொழிகளும் இங்கு பரவலாக பேசப்படுகின்றன

சான்றுகள்

தொகு
  1. "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
  2. "Census of India Search details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
  3. "8 COVID-19 Special Arrivals at Rayadurg SWR/South Western Zone - Railway Enquiry".
  4. "Chapter–3 (Literates and Literacy rate)" (PDF). Registrar General and Census Commissioner of India. பார்க்கப்பட்ட நாள் 23 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராயதுர்கம்&oldid=3814739" இலிருந்து மீள்விக்கப்பட்டது