கூட்டி (Gooty) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள நகரமும், மூன்றாம் நிலை நகராட்சியும் ஆகும்.[3] [4][5]இச்சிற்றூர் கூட்டிக் கோட்டைக்கும்[6][7], அசோகர் காலத்துக் கல்வெட்டுக்களுக்கும் பெயர் பெற்றது. இவ்வூரைச் சுற்றிலும் மலைகள் சூழ்ந்துள்ளன.

கூட்டி
நகரம்
கூட்டிக் கோட்டை
கூட்டிக் கோட்டை
கூட்டி is located in ஆந்திரப் பிரதேசம்
கூட்டி
கூட்டி
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தில் கூட்டியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°07′16″N 77°38′02″E / 15.121°N 77.634°E / 15.121; 77.634
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
பரப்பளவு
 • மொத்தம்34.84 km2 (13.45 sq mi)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்48,658
 • அடர்த்தி1,400/km2 (3,600/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
வாகனப் பதிவுAP
இணையதளம்gooty.cdma.ap.gov.in/en
கூட்டிக் கோட்டையின் தூரக் காட்சி

மைசூர் இராச்சியத்தின் திப்பு சுல்தான் ஆட்சியின் கீழிருந்த கூட்டிக் கோட்டை, நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டதால், கூட்டிக் கோட்டை ஐதராபாத் நிசாம் வசம் ஒப்படைக்கப்பட்டது.

புவியியல்

தொகு

15°07′N 77°38′E / 15.12°N 77.63°E / 15.12; 77.63 பாகையில் அமைந்த கூட்டி சிற்றூர், அனந்தபூரிலிருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 345 மீட்டர் (1131 அடி) உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கூட்டி நகரத்தின் மக்கள் தொகை 48,658 ஆகும். அதில் ஆண்கள் 23,943 மற்றும் பெண்கள் 24,715 ஆவர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1032 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5216 வீதம் உள்ளனர். எழுத்தறிவு 76.91% ஆகவுள்ளது. இதன் மக்கள்தொகையில் இந்துக்கள் 74.24%, இசுலாமியர் 22.54%, கிறித்தவர்கள் 2.86% மற்றும் பிறர் 0.36% ஆகவுள்ளனர்.[8]

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gooty
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 21 October 2014.
  3. "Basic Information of Municipality". Commissioner and Directorate of Municipal Administration. Municipal Administration & Urban Development Department, Govt. of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 18 February 2015.
  4. "District Census Handbook – Chittoor" (PDF). Census of India. p. 15,192. பார்க்கப்பட்ட நாள் 7 November 2015.
  5. "Anantapur District Mandals" (PDF). Census of India. p. 375. பார்க்கப்பட்ட நாள் 6 June 2017.
  6. "Historic Gooty fort in need of renovation". The Hindu (Anantapur). 7 June 2014. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/historic-gooty-fort-in-need-of-renovation/article6092037.ece. பார்த்த நாள்: 21 October 2014. 
  7. "Archived copy". Archived from the original on 14 June 2016. பார்க்கப்பட்ட நாள் 15 June 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  8. Gooty Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டி&oldid=3399600" இலிருந்து மீள்விக்கப்பட்டது