ஜம்புகோளப்பட்டினம்

நாவலந்தீவு என்றழைக்கப்படும் ஜம்புல்லைத்தீவிலேயே இப்பட்டினம் அமைந்துள்ளமையால் சம்புத்துறை/சம்­பில்­துறை எனவும் நாவல் என்றால் 'ஜம்பு' என்று சிங்களத்தில் கூறப்படுவதால் ஜம்புகோளப்பட்டினம் என்று தமிழ் நூல்களும், பாளி நூல்களும் அழைத்தன. யாழ்ப்பாணக் குடாநாட்டின் இன்றைய வலி கிராமம் பகுதி முன்னர் ஜம்புதீவு என அழைக்கப்பட்டது. ஜம்புதீவு என்றால் நாவலந்தீவு எனலாம். தீவு என்ற பெயருகேற்ப வலிகாமம் முன்பு நாற்புறமும் கடலால் சூழப்பட்டிருந்தது. கிழக்கே உப்பாற்றையும் தொண்டமானற்றயும் பிரித்து காலகதியில் ஓர் நிலமேடு ஒன்று தோன்றியது. இந் நாவலந்தீவிலேயே ஐம்புகோளப்பட்டினம் என்ற துறை உள்ளது.இத் துறைமுகம் யாழ்ப்பாணத்தில் உள்ள திருவடிநிலைக்கு சிறிது தூரத்தில் இருக்கின்றது. இத் துறைமுகம் சிறந்த வாணிப நிலையமாக விளங்கியது. இலங்கையில் கிடைத்த பொருள்கள் மட்டுமன்றி, கீழத்தேச மேலைத்தேச வாணிபப்பொருட்களும் இத் துறைக்கு வந்து சேர்ந்து ஒரு பண்டமாற்று வாணிப நிலையமாக விளங்கியது. சாம்பில்துறை வலிகாமத்தில் அமையும் ஊராகும். இதன் பழைய பெயர்களாக சம்புகோவளம், ஜம்புகோளம், சம்புக்கல், ஜம்புகோளப்பட்டினம், ஜம்புத்துறை ஆகும்.

ஜம்புகோளப்பட்டினம்

வரலாறு தொகு

கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் புத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் தன் மகள் சங்கமித்தையை வெள்ளரசுக் கிளைகளுடனும் பரிவாரங்களுடனும் இலங்கைக்கு அனுப்பினான். அவர்கள் இந்த சம்புத்துறையில் வந்து இறங்கித் தரைமார்க்கமாக அனுராதபுரம் சென்றனர். அவர்களை தேவநம்பிய தீசன் வரவேற்று வெள்ளரசுக் கிளை ஒன்றை சம்புகோளத்தில் நாட்டினான். அதன் அருகே "திசமாக விகாரை" என்ற புத்த பள்ளியை கட்டுவித்தான். இதன் அழிபாடுகள் சம்பில்துறை திருவடிநிலை பகுதிகளில் காணப்படுகின்றது.

 
வெள்ளரசுமரம்

சம்புத்துறை ஜம்புக்கோள எனக் கூறப்படுகின்றது. இது சம்புக்கோளம் என்ற பழைய பெயரின் மாறுபாடு ஆகும். இது மாதகலுக்கு அருகில் உள்ளது. இந்த சம்புத்துறையிலிருந்தே தேவநம்பிய தீசனால் அசோக மன்னனிடம் அனுப்பட்ட தூதுவர்கள் மரக்கலம் ஏறிச்சென்றனர்.

 
ஜம்புகோளவிகாரை

வங்காளத்தில் உள்ள தாம்ரலிப்பதி துறைமுகத்திற்கும் கடல்வாணிபத் தொடர்புகள் இருந்து வந்தது. பௌத்தம் முன்பேயே வடக்கிலுள்ள மாதோட்டம், கிழக்கே உள்ள கோணேஸ்வரப்பகுதி ஆகியவை நாகரிக வளர்ச்சியில் முன்னின்ற துறைமுகங்கள் ஆகும். இக்கருத்துக்களில் இருந்து சில எண்ணங்களை இங்கு சுட்டிக்காட்டிட முடியும். அனைத்துப் பெயர்களும் பொதுக்கூறுகளில் வேறுபாடு கொண்டாலும் சிறப்புக் கூறாக "சம்பு"வை கொண்டுள்ளது. பொதுகூறுகளில் துறை, கோவளம் என்பன கடல் சார்ந்த இருப்படித்தை சூட்டிட வல்லன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரேயே இப் பெயர் கொண்டதாக இவ்விடம் திகழ்ந்துள்ளது. சிங்கள இலக்கியங்களில் ஜம்புக்கோளம் என குறிப்பிடப்பட்டாலும் தமிழ் பெயரே முதன்மையானது. திரிந்த பின்னரே சிங்களத்தில் இவ்வாறு கூறப்படுகின்றது. ஜம்புகோளப்பட்டினமும் மணிப்பல்லவம் ஒன்று.ஏன் எனில் மணிப்பல்லவம் காரைதீவே ஆகும். எனவே இக் கூற்றும் ஜம்புகோளத்துறை மணிப்பலவாம் எனும் காரைதீவில் அமைந்துள்ள ஒரு துறை ஆகும். மணிப்பல்லவத்தில் இருந்த மணிபீடிக்கை தான் புத்த பீடிக்கை ஆகும். இதனால் மணிபல்லவம் ஒரு பௌத்த தலமாக விளங்கியது. இம் மணிப்பல்லவதில் உள்ள ஜம்புகோளபட்டினம் மூலமே இலங்கைக்கு பௌத்த மதம் கலாசாரம் கொண்டு வரபட்டது.இதனால் மணிபல்லவமும் ஜம்புகோளப்பட்டினமும் ஒரே இடத்தையே குறிக்கின்றது. இலங்கை அரசனான தேவநம்பிசதீசன் அரிட்டன் எனும் பௌத்த தேரரை சக்கரவர்த்தியிடம் அனுப்பி போதிமரத்தை இலங்கைக்கு கொண்டுவரச் செய்த போது அவர் மரக்கலமேறி சென்றது இந்த ஜம்புகோளப்பட்டினத்திலே ஆகும்.மீண்டும் போதி மரத்துடன் திரும்பி வந்து இறங்கியதும் இந்த ஜம்புகோளப்பட்டினத்திலே ஆகும். அனுராதபுரத்தில் நடப்படட போதிமரத்தினின்றும் உண்டான ஒரு போதிமரக்கன்றை ஜம்புக்கோளத்துறைமுகத்தில் வளர்த்ததாகவும் ,தேவநம்பியதீசன் அங்கு பௌத்த பிக்குகளுக்காக ஒருவிகாரையை கட்டினான்.அவ்விகாரை ஜம்புகோளவிகாரை என்று அழைக்கப்பட்டது.இங்கு ஒருசேதியம்(புத்த பாத பீடிக்கை)அமைக்கப்பட்டு இருந்தது.ஜம்புகோளபட்டினத்தில் விகாரை இருந்தது.புனிதமான போதிமரம் நட்டு வளர்க்கப்பட்டது.இவை எல்லாம் அவ்விடம் பௌத்தர்களுக்கு புண்ணிய இடமாக இருந்தது.

இங்கிருந்த பாத பீடிகையை வணங்குவதற்காக வெளிநாட்டில் இருந்து யாத்திரைகள் வந்தனர்.வெகு துயரத்தில் இருந்து யவன தேசதிலிருந்து யாத்திரைகள் வந்தனர்.மணிமேகலையும்,சாவக நாட்டு அரசனும், நாக நாட்டு மக்கள் பீலிவளை என்பவளும் இந்த சேதியத்தை வணங்கினார்கள்.பிராமணன் திஸ்ஸன் காலத்தில் இலங்கையில் இருந்த பௌத்த பிக்குகள் இந்த நாட்டை விட்டு இந்தியாவிற்கு வந்த போது இந்த ஜம்புகோளப்பட்டினத்துக்கு வந்து கப்பல் ஏறி சென்றார்கள்.

 
ஆதார சான்றுகள்
 
ஆதார சான்றுகள்

கி.மு.3ம் நூற்றாண்டில் தேவநம்பிசதீசன் என்னும் அரசனால் கட்டபட்ட பௌத்த விகாரையில் வசித்திருந்த பிக்குகள் தவிர வேறு மக்கள் இங்கு வாசித்திருந்ததாக பௌத்த நூல்கள் கூறவில்லை.இலங்கையின் வடபகுதியான நாகநாடிலே பேர் பௌத்த சேதியம் ஒன்று இருந்தது.அதனை இலங்கையில் இருந்த பௌத்தர்கள் பெரிதும் போற்றி வணங்கினார்கள்.அந்த சேதியம் ஜம்புகோளப்பாடினத்தில் இருந்த சேதியம் ஆகும்.இச்சேதியத்தை பற்றி கதை ஒன்று கூறப்படுகின்றது.மாமனும் மருமகனும் ஆகிய இரு அரசர்கள் ஒரு மணி ஆசனத்திற்கு தம்முள் போர் செய்ய அதனை புத்தர் அறிந்து அவர்கள் முன்தோன்றி இது என்னுடைய ஆசனம் நீங்கள் இதன் பொருட்டு போர் செய்ய வேண்டாம் என போரை நிறுத்தி இவ்வசனத்தின் மீது இருந்து அறிவுரை வழங்கியதாக கூறப்படுகின்றது.இந்தக் கதையில் வரும் மணி ஆசனம் தான் மணிபல்லவத்திலிருந்த புத்த பீடிகை (சேதியம்)ஆகும்.மேலும் மணிபல்லவம் என்ற பெயர் மணிபல்லங்கம் என்பதன் திரிப்பாகும். பல்லங்க என்னும் சொல் பாளி மொழியில் பலகை ,ஆசனம் என்பதாகும் .மணிபல்லங்க என்ற சொல் தமிழில் மணிபல்லவம்ஆகும் இலங்கையில் உள்ள பௌத்தர்கள் பாராயணம் செய்யுள்களில் ரத்னத்திரிய வந்தனா காதா என்பதும் ஒன்று ஆகும்.

இந்த பாளி நூலின் பொருள் வருமாறு -தங்கையின் மகனும் ,மாமனும் கொடுத்த உத்தமமான மணி ஆசனமானது எந்த இடத்தில் உள்ளதோ அங்கு  பிக்குகளுக்கு தர்மத்தை போதித்த நாகத்தீவை தலை குனிந்து வணங்குகின்றேன் .

இச் செய்யுள் நாகத்தீவிலே நாக அரசர்களால் புத்த பகவானுக்கு அளிக்கப்படட மணிபல்லங்கதிற்கு வணக்கம் கூறுகின்றது . மணிபல்லங்கம் என்ற பெயரை தமிழ் வழக்குப்படி மணிபல்லவம் என்ற தமிழர்கள் வழங்கினார்கள் என்றும் வேங்கடசாமி அவர்கள் கூறுகின்றார். தொடர்ந்து மணிபல்லங்கம் என்று கூறப்படும் மணிபீடிகை இருந்த இடம் ஜம்புகோளப்பட்டினம் எனப்படும் கரையோரப்பட்டினம். இது மணிபல்லவம் என்றும் தமிழில் அழைக்கப்பட்ட்து.எனவே மணிபல்லங்க என்ற மணிபீடிகை இருந்த இடம் ஜம்புகோளப்பட்டினம் எனப்படும் கரையோரதுறைமுகம் ஆகும்.மணிபல்லன்க என்றால் தமிழில் மணிபல்லவம் என்பது ஆகும்.அதனால் அந்த இடத்தை மணிபல்லவம் என மணிமேகலை நூல் கூறுகின்றது .பாளி நூல்களும் தமிழ் நூல்களும் ஒரே இடத்தையே அழைத்தமை தெரியவருகின்றது .அதனாலேதான் வேங்கடசாமி அவர்கள்  இரண்டும் ஒரே இடம் என்கின்றார் .ஆனால் மணிமேகலையில் கூறப்படும் மணிபீடிகை மணிபல்லவத்தில் இருந்ததே தவிர ஜம்புகோளப்பட்டினம் என்று வேங்கடசாமி கூறும் துறைமுகத்துக்கு அருகில் இருக்கவில்லை என்பதை மணிமேகலையில் வரும் பாடல் வரிகள் மூலம் தெரியவருகின்றது.

என்ற வரிகள் மூலம்  மணிபல்லவத்தின் துறையில் வந்து நின்ற கப்பல் அரசன் கப்பல் என்றும் அறிந்து மணிமேகலை மகிழ்ந்து,அரசனாகிய ஆபுத்திரனை அழைத்துக் கொண்டு மலர் சோலை நிறைந்த தீவகத்தை வலஞ்சென்று மணிபீடிகையை காட்டுகின்றாள் .எனவே மணிபல்லவத்தில் கப்பல்கள் வந்து நிற்கும் துறைமுகம் ஆகும்.மணிபல்லன்க  எனக்றுகூறும் மணி பீடிகை இன்னோர் இடத்திலும் இருந்திருக்கின்றது என்பதை இது எடுத்து காட்டுகிறது . எனவே மணிபீடிகை வேறிடம் .துறைமுகம் வேறிடம் .ஆனால் ஜம்புகோளப்பட்டினம் அக்காலத்தில் பிரசித்தமாக பயன்படுத்தப்பட்டதால் அத்துறையில் இருந்த மணிபல்லவம் என்ற பெயரே இத்துறைக்கு பயன்படுத்த பட்டது என்பதே பொருத்தமானது ஆகும் .எவ்வாறு எனில் கட்டுநாயக்க விமானத்தளம் இன்று கொழும்பு விமானத்தளம் என்றும் ஒரே இடத்தை அழைப்பது போன்றாகும் .இத்தகைய பெயர் வேறுபாடுகள் அக்காலத்திலும் இருந்ததையே இது எடுத்துக் காட்டுகின்றது .பேராசிரியர் வி.சிவசாமி அவர்கள் எழுதிய "வெறுப்பிட்டியில் புதையல்கள்" எனும் கட்டுரையில் வெறுப்பிட்டி எனும் இடத்தில பழைய மணிபிடடிகள் காணப்படுகின்றன என்கின்றார். அம மணிபட்டிகள் மக்களால் அளிக்கப்பட்டுள்ளது. இவ் அழிபாடுகளிடையே பழங்கால செங்கட்டிகள்,மதிபாண்ட ஓடுகள் ,கூரை ஓட்டு துண்டுகள் என்பனவும் காணப்படுகின்றன.

இதை விட இங்கு கிடைத்த பழைய பானை ஓடிலே பழைய பிராமி எழுத்து ஒன்று "ம8" இது ஒரு வகையான கல்வெட்டு குறி ஆகும் . அடியில் இருந்து நுனி வரை குறுகி ஓரளவு வடடமாகவோ ,சதுரமாகவோ காடசி அளிக்கும் கல்வெட்டு உள்ளது.இது 1 ஆதி 2 அங்குல உயரம் கொண்டது.அடிப்பகுதி 4 ஆதி 6 அங்குலம் சுட்டளவு கொண்டது.நுனிக்கு கீழ் பகுதி ஓரடி சுட்டளவு கொண்டது.7 படிகள் இங்கு காணப்படுகின்றது. இது இயற்கையாக கடற்கரையில் தோன்றிய கல்லாகவும் இருக்கலாம்.ஒரு சில வேளைகளில் இந்துக் கோவிலின் துப்பி முடி தெரிவது இல்லை.வேரப்ட்டியிலே காணப்படுகின்ற செங்கட்டிகள்,மண்பாண்ட ஓடுகள்,கட்டிடக்கற்கள்,கூரைஓடுகள் போன்றவை யாழ்ப்பாணத்தில் கந்தரோடை, வல்லிபுரம் போன்ற இடங்களில் காணப்படுகின்றது.காரைநகரில் மேற்கு கரையோரமாக வடக்கே எரிமூலை தொடக்கம் தென்முனை வரை சாய்ந்து கொண்டு அமைந்த படிக்கட்டுகள் காணப்படுகின்றன.கி.மு.3 ம் நூற்றாண்டில் இருந்து ஈழம் வடஇந்தியாஓடு கொண்டிருந்த கலாசார வணிகத்தொடர்புகளை பொறுத்தவரை எல்லச்சான்றாதாரங்களும் வேறெந்த துறைமுகத்தையும் விட முக்கியம் கொண்டதாக ஜம்புகோளப்பட்டினம் வளர்ச்சி பெற்று காணப்படுகின்றது.மேலும் ஜம்புகோளப்பட்டினத்துக்கு அருகில் உள்ள பகுதி வாணிப நகரமாக வளர்ச்சி பெற்றது .

    பெருமளவான பௌத்தர்கள் இங்கு வாழ்ந்தனர்.புத்தர் நாகருக்காக இலங்கைக்கு இரண்டாவது முறையாக வருகை தந்த போது நாக தீபத்தில் உள்ள ஜம்புகோளப்பட்டினத்தில் நாகர்களை தன்போதனைகளை தழுவ செய்தார் என மகிந்தர் தேவநம்பிஜ தீசனுக்கு எடுத்துத்துரைத்தார்.அதே வேலை அங்கு வாழ்ந்த தமிழக குடி மக்களும் சமயப்பொறையும்,இந சகிப்பு உடையவர்களாக இருந்தனர்.அதனால் அங்கு வாழ்ந்த ஆதி நாகர்களே தமிழ் குடிகளே பௌத்த மத வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.எனவே ஜம்புகோளப்பட்டினத்தில் பௌத்தர்கள் குடியேறி இருந்தனர்.  வரல்லட்டு காலத்தின் ஆரம்பத்தில் இருந்தே தமிழகமும் ஈழமும் வாணிபத்துறையில் ஒன்றாக இணைந்து நெருக்கமான தொடர்புகளை உடையவையாக விளங்கியது.நாக நாட்டில் உள்ள நகரம் ஒன்று புகார் நகரோடு ஒப்பிடப்படுகின்றது.கண்ணகியின் தந்தை ஆனா மாநாயகன் வாழ்ந்திருந்தான்.நாகநாடு  'நாகதீப'என இனம் காணப்பட்டது.இது ஒரு சமயமஜம்புகோளத்தை குறிக்கின்றது.மாநாய்க்கனை வடபகுதிஓடு தொடர்பு படுகின்ற வேறு ஜாதிகளும் உள்ளன.கண்ணகிக்கு கால் சிலம்பு அமைப்பதற்கு உரிய நாகமணியை பெறுவதற்கு மீகாமனை வட பகுதிக்கு இவன் அனுப்ப இவனை எதிர்த்து போர் இடட வெடியரசனும்,அவனின் சகோதரர் ஆகியோரையும் வெற்றி  கொண்டு நாக மணியுடன் மீகாமன் தமிழகம் திரும்பியதாக உள்ளது.மாநாயக்கனை நயினை நாகபூசணிஅம்மன் ஆலயத்தோடு  இணைக்கும் பல கருத்துக்கள் உள்ளன.இவற்றை விட கூவலனுடைய தந்தை ஆகிய மாசாத்துவானும் அவனின் வாணிப நண்பனின் பெயராக கண்ணகியின் தந்தை ஆகிய மாநாயகனும் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளமை அக் காலவாணிப அமைப்பு முறையை எடுத்து காட்டுகின்றது.
 
கப்பல்
   நாக நாடுதான் புகார் நகரம் வர்த்தக தொடர்புகளை கொண்டு இருந்தது.நாக நாடு இளவரசி பீலிவளை சூழ அரசனான நெடுங்கிள்ளியுடன் கொண்டிருந்த தொடர்பு தான் பேற்ற மகனை அரசனிடம் அளிக்குமாறு அவ் இரு பகுதிகளுக்கு இடையே வாணிப நடவடிக்கையில் ஈடுபட்ட கம்பாலா செட்டியிடம் அளித்தார்.தேவநம்பிய தீசனால் அசோகனுக்கு அனுப்பபட்ட தூதுக்குழு இத் துறைமுகத்தில் இருந்து இந்தியாவிற்கு  சென்றனர்.தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட வணிகர் மணிப்பல்லவதிலே தங்கி நின்று சென்றனர்.நாக நாடு மணிபல்லவதுடன் கொண்டிருந்த வர்த்தக தொடர்புகளை உறுதி செய்கின்றது. நாக அரசர்கள் இரத்தின கற்களை இழைத்த சிம்மாசனத்திற்கு போர் இட்டனர்.இப் போர் மணிபல்லவ தீவில் மணிமேகலையின் முற்பிறப்பை உணர்த்திய மணிபீடிகை காரணமாகவே ஏற்பட்டது.தேவநம்பியதீசன் காலத்தில் ஜம்புகோளப்பட்டினத்தின் மூலமாக தென் கிழக்கு கரையோரமாக வங்காளத்தில் உள்ள தாம்ரலிப்த்தி துறைமுகத்தோடு ஈழம் தொரடப்பு கொண்டிருந்தது.ஈழத்துறைமுக பட்டினங்களாக மாதோடடபட்டினம்,ஜம்புகோளப்பட்டினம்,ஆகியன தமிழகம்,ஆந்திரா,கலிங்கம்,வங்காளம் ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த கொற்கை பட்டினம் ,காவிரிப்பூம்பட்டினம்,மசூலிப்பட்டினம்,விசாகப்பட்டினம்,கலிங்க பட்டினம் ஆகியவற்றுடநும் உரோமுடனும் கொண்டிருந்த வர்த்தக நடவடிக்கை மூலம் இணைந்து இருந்தன.

தமிழ் பட்டினம் என்பதன் திரிபே 'பட்டின' ஆகும்.ஜம்புகோளப்பட்டினம் இத்தகைய விளக்கத்துக்கு உரியதாகவே காணப்படுகின்றது எனினும் இச் சொல்லில் 'ஜம்புகோளம்' என்பது கோளஎன மருவியது,தமிழ் நாட்டார் ஈழத்தின் மீது மேற்கொண்டிருந்த வர்த்தக நடவ்டிக்கைகளை குறிக்கும் கல்வெட்டுகள் ஈழத்தின் கிழக்கு பகுதியிலும் காணப்படுகின்றது. இவற்றுள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள குடுவில் என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டு முக்கியமாகின்றது. இதுவும் அநுராதபுரம், வவுனியா, ஆகிய பகுதிகளில் காணப்படுகின்ற கல்வெட்டுக்களை ஒத்த காலத்திற்குரியதுதான். குடுவில் கல்வெட்டு "தீகவாபி பொறன வணிஜன " பற்றியும் அவர்களின் மனைவியாகிய திஸ்ஸ என்ற பெயரை தாங்கிய தமிழ் பெண்மணி பற்றியும் குறிப்பிடுகின்றது. இத்தீகவாபி ஈழத்தில் ஆரியரின் ஆதிகுடியேற்ற மையங்களில் ஒன்றாகும். பின்னர் துட்டகைமுனு மன்னனுடைய ஆடசியில் அவன் தம்பியாகிய "சட்டதிஸ" இப்பகுதியுடன் இணைத்துக் கூறப்படுவதும் அவதானிக்கத்தக்கது. ஈழத்தின் தென்கிழக்கு பகுதியில் ஒரு முக்கிய பகுதியாக இது விளங்கியதால் தான் இவ்விடத்துடன் வணிக நடவடிக்கைகளை வெளிநாட்டவரான தமிழகத்தார் மேற்கொண்டிருந்தனர். இக்கல்வெட்டில் இடம்பெறும் தீகவாபி  "தீகவாபி பொறன வணிஜன "  என்ற பதத்துக்கு பரவித்தானா "தீகவாபி வாசிகளான வணிகர்கள்" என்ற விளக்கத்தினை கொடுத்தாலும் கூட கிருபாமூன இத்தொடரில் இடம்பெறும் "பொறான" என்ற பதத்தினை மையமாக கொண்டு இதற்கு தீகவாபியில் வாழும் பழைய வணிகர் என விளக்கம் கொடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் இப்பகுதியில் வாழ்ந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வணிகர் கூடடத்தினையே சுட்டிக் காட்டுகின்றது. இதே போன்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சேருவில என்ற இடத்தில் உள்ள கல்வெட்டிலும் "தமேட" என்ற பதங் காணப்படுகிறது. கி.பி.1284 இல் வெனிஸ் நகரத்து பிரயாணி ஆகிய மார்க்கோபோலோ என்பவன் சீன தீசத்தில் இருந்து மேலை தீசத்திற்கு போகும் மார்க்கத்தில் யாழ்ப்பாண துறை முகத்தில் இறங்கினான்.அக் காலத்தில் இலங்கை முழுவதும் சந்தோமென் என்னும் அரசனின் ஆட்சி இருந்தது,கோலம் எனும் துறைமுகத்திற்கு சீனாவில் இருந்தும் மேலைத்தீச நாடுகளில் இருந்தும் கப்பல்கள் வியாபார நோக்கத்தில் வந்தது முஸ்லீம் பிரயாணிகள் ''கால " என்றதும் மார்க்கோபோலோ "'கோவளம் " என்றதும் ஊர்காவற்துறை காரைதீவில் குறிப்பிடுகின்றது.ஜம்புகோளப்பட்டினம் காரைதீவில் உள்ள பெரிய ஒரு துறைமுகம் ஆகும்.

கி.பி.1292ல் மென்றிக்கோர்வினோ எனும் இடத்தில் உள்ள யோவான் என்னும் கிருஸ்தவ குரு யாழ்ப்பாண கடல் வழியே பிரயாணம் செய்த பொது அக் கடற்கரைகளில் ஆண்டுகள் தோறும் அறுபது மரக்கலன்களுக்கு மேல் மோதுண்டு உடைப்பட்டது.இக் கடல் வழியாக ஏராளமான மரக்கலங்கள் போக்குவரத்து செய்தன.முத்யாலாம் பராக்கிரம பாகுவால் நயினாதீவில் வரைந்து வைக்கப்படட மரக்கலத்தை பற்றியா சாசனமும் இங்கு பொருத்தமுடையது ஆகும்.மார்க்கோபோலோவால் 1284ம் ஆண்டில் கூறப்படட குறிப்பும் 1292 யோவான் மதகுருவாழ் கூறப்படட சில கருத்துக்கள் ஜம்புகோளப்பட்டினத்தின் சிறப்புக்களை எடுத்து கூறுகின்றன..  தமிழ் நாட்டார் ஈழத்தின் மீது மேற்கொண்டிருந்த வர்த்தக நடவ்டிக்கைகளை குறிக்கும் கல்வெட்டுகள் ஈழத்தின் கிழக்கு பகுதியிலும் காணப்படுகின்றது. இவற்றுள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள குடுவில் என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டு முக்கியமாகின்றது.

 
மரக்கலம்
      இதுவும் அநுராதபுரம், வவுனியா, ஆகிய பகுதிகளில் காணப்படுகின்ற கல்வெட்டுக்களை ஒத்த காலத்திற்குரியதுதான். குடுவில் கல்வெட்டு "தீகவாபி பொறன வணிஜன " பற்றியும் அவர்களின் மனைவியாகிய திஸ்ஸ என்ற பெயரை தாங்கிய தமிழ் பெண்மணி பற்றியும் குறிப்பிடுகின்றது. இத்தீகவாபி ஈழத்தில் ஆரியரின் ஆதிகுடியேற்ற மையங்களில் ஒன்றாகும். பின்னர் துட்டகைமுனு மன்னனுடைய ஆடசியில் அவன் தம்பியாகிய "சட்டதிஸ" இப்பகுதியுடன் இணைத்துக் கூறப்படுவதும் அவதானிக்கத்தக்கது. ஈழத்தின் தென்கிழக்கு பகுதியில் ஒரு முக்கிய பகுதியாக இது விளங்கியதால் தான் இவ்விடத்துடன் வணிக நடவடிக்கைகளை வெளிநாட்டவரான தமிழகத்தார் மேற்கொண்டிருந்தனர். இக்கல்வெட்டில் இடம்பெறும் தீகவாபி  "தீகவாபி பொறன வணிஜன "  என்ற பதத்துக்கு பரவித்தானா "தீகவாபி வாசிகளான வணிகர்கள்" என்ற விளக்கத்தினை கொடுத்தாலும் கூட கிருபாமூன இத்தொடரில் இடம்பெறும் "பொறான" என்ற பதத்தினை மையமாக கொண்டு இதற்கு தீகவாபியில் வாழும் பழைய வணிகர் என விளக்கம் கொடுத்துள்ளனர்.
     எவ்வாறாயினும் இப்பதான் இப்பகுதியில் வாழ்ந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வணிகர் கூடடத்தினையே சுட்டிக் காட்டுகின்றது. இதே போன்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சேருவில என்ற இடத்தில் உள்ள கல்வெட்டிலும் "தமேட" என்ற பதங் காணப்படுகிறது. கி.பி.1284 இல் வெனிஸ் நகரத்து பிரயாணி ஆகிய மார்க்கோபோலோ என்பவன் சீன தீசத்தில் இருந்து மேலை தீசத்திற்கு போகும் மார்க்கத்தில் யாழ்ப்பாண துறை முகத்தில் இறங்கினான்.அக் காலத்தில் இலங்கை முழுவதும் சந்தோமென் என்னும் அரசனின் ஆட்சி இருந்தது,கோலம் எனும் துறைமுகத்திற்கு சீனாவில் இருந்தும் மேலைத்தீச நாடுகளில் இருந்தும் கப்பல்கள் வியாபார நோக்கத்தில் வந்தது முஸ்லீம் பிரயாணிகள் ''கால " என்றதும் மார்க்கோபோலோ "'கோவளம் " என்றதும் ஊர்காவற்துறை காரைதீவில் குறிப்பிடுகின்றது.ஜம்புகோளப்பட்டினம் காரைதீவில் உள்ள பெரிய ஒரு துறைமுகம் ஆகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்புகோளப்பட்டினம்&oldid=3898657" இலிருந்து மீள்விக்கப்பட்டது