ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகம், இட்டாநகர்

அருணாச்சலப்பிரதேச அருங்காட்சியகம்

ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு மாநில அருங்காட்சியகம் இட்டாநகரில் உள்ள அருணாச்சல பிரதேசத்தின் மாநிலத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகமாகும். 1980 களில் நிறுவப்பட்ட, இந்த அருங்காட்சியகம், இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் பழங்குடி வாழ்க்கையின் அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்களில் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் உள்ளன. மேலும், துணி வகைகள், தலைக்கவசம் தொடர்பானவை, ஆயுதங்கள், கைவினைப் பொருட்கள், இசைக்கருவிகள், நகைகள் மற்றும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படக்கூடிய பிற கலைப்பொருட்கள் ஆகியவை அடங்கும். பல ஆண்டுகளாக, இந்த அருங்காட்சியகம் மாநில தலைநகரான இட்டாநகரில் ஒரு முக்கியமான சுற்றுலா தலமாக மாறியுள்ளது.[1]

ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகம்
அருங்காட்சியக நுழைவாயில்
Map
அமைவிடம்மாநில அருங்காயக சாலை,
இட்டாநகர் 791111
ஆள்கூற்று27°06′07″N 93°37′30″E / 27.102036°N 93.625003°E / 27.102036; 93.625003
வகைஇன வரைவியல் மற்றும் தொல்லியல்
உரிமையாளர்அருணாசலப்பிரதேச அரசு

சேகரிப்புகள் மற்றும் பணிகள் தொகு

1980 களில் நிறுவப்பட்ட ஜவஹர்லால் நேரு மாநில அருங்காட்சியகம் அருணாச்சல பிரதேசத்தில் பழங்குடி வாழ்வின் பல்வேறு அம்சங்களைக் காட்சிப்படுத்துவதோடு அந்த மாநிலத்தின் இயற்கை பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த அருங்காட்சியகத்தின் தரை தளத்தில் ஒரு விரிவான இனவியல் தொடர்பான சேகரிப்புகள் உள்ளன. மேலும் மரபு சார்ந்த கலைப் பொருள்கள், இசைக்கருவிகள், மதம் தொடர்பான பொருள்கள் மற்றும் மரம் செதுக்குதல் மற்றும் கரும்பு பொருட்கள் போன்ற கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தின் முதல் தளத்தில் இட்டா கோட்டை, நோக்ஸ்ஸ்பார்பாட் மற்றும் மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள மாலினிதன் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.[2]

இவ்வாறான சேகரிப்பைத் தவிர, இந்த அருங்காட்சியகம் அதன் கைவினைப்பொருட்கள் மையத்தில் பாரம்பரிய கரும்பு வகைகளுக்காக பட்டறை ஒன்றை நடத்துகிறது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள கடையில் பழங்குடியினரின் கைவினைப்பொருட்களை விற்பனை செய்யப்படுகின்றன.[3]

2011 ஆம் ஆண்டில், எவரெஸ்ட் மலையை அளந்த, இந்த மாநிலத்தைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமைக்குரிய ரான டாபி மிரா எவரெஸ்ட் மலைப் பயணத்தின்போது கையாண்ட தனது முழு பயணக் கருவிகளையும் இந்த அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.[4]

பார்வையாளர் வசதி தொகு

ஜவஹர்லால் நேரு அருங்காட்சிகத்திற்குச் செல்வதற்கு டாக்ஸி வாடகைக்கு எளிதாக கிடைக்கும். இந்த அருங்காட்சியகத்தின் மூலமாக பார்வையாளர், பார்வையிடுவதைவிட மற்றொரு வாய்ப்பும் உள்ளது. அது கரும்பு பொருட்களை தயாரிக்க கற்றுக்கொள்வதற்காக அருங்காட்சியகம் நடத்தும் பட்டறையில் ஒருவர் பங்கேற்கலாம் என்ற வசதியேயாகும். பழங்குடியினர் கைவினைப் பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவதற்கான வசதியையும் இந்த அருங்காட்சியகம் கொண்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை ஆண்டு முழுவதும் பார்வையிடலாம். அதற்கான கால வரையறை எதுவுமில்லை. இங்கிருந்து 2.6 கி.மீ தொலைவிலுள்ள இட்டா கோட்டை, 0.8 கி.மீ தொலைவிலுள்ள புத்தர் கோயில், மற்றும் 10.7 கி.மீ தொலைவிலுள்ள கியாகர் சினி ஆகிய இடங்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு அண்மையில் உள்ள இடங்களாகும். பார்வையாளர்கள் அருகிலுள்ள இந்த அருங்காட்சியகங்களுக்கும் இங்கிருந்து செல்லலாம்.[5]

மாநில பிற அருங்காட்சியகங்கள் தொகு

இம்மாநிலத்தில் இட்டாநகரில் பாபம்பரே என்னுமிடத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு மாநில அருங்காட்சியகம் தவிர தவாங்,மேற்கு காமெங், கிழக்கு காமெங், மேல் சுபன்சிரி, மேற்கு சியாங், கிழக்கு சியாங், லோஹித், சங்லங், டிராப், ரோயிங், கீழ் திபாங் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களிலும் மாவட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன. கீழ் திபாங் பள்ளத்தாக்கின் அருங்காட்சியகம் இன்னும் செயல்பட ஆரம்பிக்கவில்லை.[6]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Itanagar". Government of Arunachala Pradesh. Archived from the original on 2010-06-23. பார்க்கப்பட்ட நாள் 2019-11-02. Jawaharlal Nehru State Museum
  2. History, religion and culture of north east India. Gyan Books. https://books.google.com/books?id=L8x0ZLkFdFkC&pg=PA29&dq=Jawaharlal+Nehru+Museum,+Itanagar&hl=en&sa=X&ei=fTx9T4GUJ8LirAfbscz4DA&ved=0CF4Q6AEwBw#v=onepage&q=Jawaharlal%20Nehru%20Museum%2C%20Itanagar&f=false. 
  3. "Arunachal Pradesh". க்ளோபல் செக்யூரிட்டி.
  4. "Everest conquerer [sic] presents gear to museum". 17 Sep 2011 இம் மூலத்தில் இருந்து 15 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120715232814/http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=5446221. 
  5. Jawaharlal Nehru State Museum, Itanagar
  6. Directorate of Research, Department of Cultural Affairs