ஜவஹர் நவோதயா வித்யாலயா, யானம்

ஜவஹர் நவோதயா வித்யாலயா, யானம் (Jawahar Navodaya Vidyalaya, Yanam) அல்லது உள்ளூரில் ஜெ. என். வி. மெட்டாகூர் என அழைக்கப்படுவது இருபாலர் உறைவிடப் பள்ளியாகும். இது புதுச்சேரி யூடி உள்ள யானம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நவோதயா வித்யாலயாக்கள் இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சினால் நிதியளிக்கப்படும் தன்னாட்சி அமைப்பாகும். இதனை நவோதயா வித்யாலயா ஸ்மிதி நிர்வகிக்கிறது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான திறமையான குழந்தைகளுக்கு நவோதயா வித்யாலயாக்கள் இலவசக் கல்வியை வழங்குகின்றன.[1] யானம் மாவட்டம் ஆந்திர மாநிலத்திற்குள் உள்ள ஒரு கடலோர பகுதியாகும். இது ஒன்றிய பிரதேச தலைமையகமான புதுச்சேரியிலிருந்து சுமார் 815 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ஜவஹர் நவயோதயா வித்யாலயா, Jawahar Navodaya Vidyalaya, Yanam
ஜெ.என்.வி. மெட்டகூர்
அமைவிடம்
இந்தியா, புதுச்சேரியில் ஜெ.என்.வி. யானம் அமைவிடம்
இந்தியா, புதுச்சேரியில் ஜெ.என்.வி. யானம் அமைவிடம்
ஜெ.என்.வி. யானம்
இந்தியா, புதுச்சேரியில் ஜெ.என்.வி. யானம் அமைவிடம்
இந்தியா, புதுச்சேரியில் ஜெ.என்.வி. யானம் அமைவிடம்
ஜெ.என்.வி. யானம்
மெட்டாகூர், யானம் மாவட்டம்
புதுச்சேரி ஒன்றியம், 533 464
இந்தியா
அமைவிடம்16°44′57″N 82°12′56″E / 16.7491227°N 82.215693°E / 16.7491227; 82.215693
தகவல்
வகைபொது
குறிக்கோள்Pragyanam Brahma
(ஞானமே பிரம்மன்)
தொடக்கம்1987
அதிபர்எம். அணுராதா
துணை முதல்வர்காலிப் பணியிடம்
பணிக்குழாம்17
பீடம்26
தரங்கள்VI - XII
மொத்த சேர்க்கை329
Campus size25 ஏக்கர்கள் (100,000 m2)
Campus typeகிராமம்
இணைப்புநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
இணையம்

வரலாறு தொகு

இந்த பள்ளி 1987-இல் நிறுவப்பட்டது, இது ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளின் ஒரு பகுதியாகும். இந்த பள்ளி நவோதயா வித்யாலயா ஸ்மிதி ஹைதராபாத் மண்டல அலுவலகத்தால் நிர்வகிக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது.[2]

சேர்க்கை தொகு

ஆறாம் வகுப்பு மட்டத்தில் ஜே.என்.வி யானத்தில் சேர்க்கை நவோதயா வித்யாலயா ஸ்மிட்டி நடத்தும் நுழைவுத் தேர்வு (ஜே.என்.வி.எஸ்.டி) மூலம் செய்யப்படுகிறது. தேர்வு பற்றிய தகவல்கள் மாவட்டத்தில் யானம் மாவட்ட ஆட்சித் தலைவர் (கலெக்டர்) அலுவலகத்தால் விளம்பரம் செய்யப்பட்டு நடைபெறுகிறது. ஆட்சித் தலைவர் ஜே.என்.வி யானத்தின் வித்யாலய மேலாண்மைக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.

இணைப்புகள் தொகு

ஜே.என்.வி யனம் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் 130014 இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.[3]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Navodaya Vidyalaya Smiti". Navodaya Vidyalaya Smiti. பார்க்கப்பட்ட நாள் 17 January 2019.
  2. "NVS RO Hyderabad - JNVs in Union territorries". NVS RO Hyderabad. Archived from the original on 1 December 2018. பார்க்கப்பட்ட நாள் 25 Feb 2019.
  3. "CBSE affiliation details of JNV Yanam". CBSE - Online School Affiliation & Monitoring System. Archived from the original on 21 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 17 January 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு