ஜாக்கியா சோமன்

இந்திய அரசியல்வாதி

ஜாக்கியா சோமன் (Zakia Soman) ஓர் இந்தியப் பெண்கள் உரிமை ஆர்வலர் மற்றும் பாரதிய முஸ்லிம் மகளிர் இயக்கம் எனும் அரசு சாரா பெண்கள் உரிமைகள் அமைப்பின் நிறுவனர் ஆவார்.[1]

ஜாக்கியா சோமன்
பிறப்புஅகமதாபாது, குசராத்து
கல்விமுதுகலை, ஆய்வியல் நிறைஞர் (ஆங்கிலம்)
பணிவழக்கறிஞர், எழுத்தாளர்
அறியப்படுவதுநிறுவனர்- பாரதிய முஸ்லிம் மகளிர் இயக்கம்

இளமை

தொகு

ஜாக்கியா சோமானி குசராத்து மாநிலம் அகமதாபாத்தில் பிறந்தார்.

ஜக்கியா குசராத்து பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் வணிகத் தொடர்புப் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2]

செயல்பாடு

தொகு

ஜாக்கியா முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காக வாதிடுபவர்.[3] இவர் அமைதி மற்றும் நீதி, மதச்சார்பின்மை, மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் ஆகிய பிரச்சினைகளில் பணியாற்றியுள்ளார். இவர் ஆக்‌ஷன் எய்டில் அமைதி மற்றும் மனித பாதுகாப்பு கருப்பொருளையும் அமைத்தார்.

ஜாக்கியா வறுமை ஒழிப்புக்கான தெற்காசியக் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளார். ஜக்கியா தனது வேலையை விட்டுவிட்டு சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகப் பணியாற்றத் தொடங்குவதற்கு முன்பு குசராத்தில் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்தார். இவர் அமைதி மற்றும் சகிப்புத்தன்மைக்கான அறிவுசார் செயல்பாட்டில் ஈடுபடும் அமைதி ஆய்வு மையத்தின் நிறுவனர் ஆவார்.

அங்கீகாரம்

தொகு

2014ஆம் ஆண்டில், தேசிய மகளிர் ஆணையத்தால் சிறந்த பெண் சாதனையாளர் விருது ஜாக்கியாவிற்கு வழங்கப்பட்டது.[4] நவம்பர் 2015-இல் பிபிசியின் 100 அச்சமற்ற பெண்கள் பட்டியலில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.[5]

சேவைகள்

தொகு
  • புனித இடங்களை மீட்டெடுத்தல்: ஹாஜி அலி தர்காவுக்குள் நுழைவதற்காக முஸ்லிம் பெண்களின் போராட்டம்.[6]
  • வளர்ச்சிக் கொள்கை விமர்சன இதழ்: தொகுதி. 1 மலர். 3: கோவிட்-19 சகாப்தத்தில் வாழ்க்கை: ஹீரா லால் தாக்கத்தை உணருதல்[7]
  • தைரியம் வெளியானது: முஸ்லீம் பெண்களின் வாழ்க்கை, போராட்டங்கள் மற்றும் தலைமைத்துவத்தின் தனிப்பட்ட கதைகள்
  • குடும்பத்திற்குள் நீதி தேடுதல்: முஸ்லீம் தனிநபர் சட்டத்தில் சீர்திருத்தங்கள் குறித்த முஸ்லீம் பெண்களின் பார்வைகள் பற்றிய தேசிய ஆய்வு
  • இந்திய முஸ்லீம் பெண்கள் இயக்கம்: பாலின நீதி மற்றும் சம குடியுரிமைக்காக
  • பலதார மணங்களில் பெண்களின் நிலை மற்றும் சட்டப் பாதுகாப்பு தேவை

மேற்கோள்கள்

தொகு
  1. . 2016-10-24. 
  2. "Zakia and Noorjehan: Duo lead movement for reforms in Muslim personal laws" (in en). www.hindustantimes.com/. 2016-09-11. https://www.hindustantimes.com/india-news/meet-zakia-and-noorjehan-who-are-leading-the-movement-for-reforms-in-muslim-personal-laws/story-1hhwA5kk9lSmaUvuj0EXGM.html. 
  3. "Yes, Tablighi Jamaat Organisers Were Irresponsible. No, They Do Not Represent All of India's Muslims".
  4. "Zakia Soman (India) | WikiPeaceWomen – English" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-07.
  5. "Zakia Nizami Soman | WISE Muslim Women". பார்க்கப்பட்ட நாள் 2016-12-10.
  6. "Women activists enter Haji Ali dargah". The Economic Times. 2016-11-29. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-0389. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/women-activists-enter-haji-ali-dargah/articleshow/55688742.cms. 
  7. "JDPR Volume 1, Issue 3 - Impact And Policy Research Institute (IMPRI)". www.impriindia.com. 2021-08-12. பார்க்கப்பட்ட நாள் 2023-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்கியா_சோமன்&oldid=3888942" இலிருந்து மீள்விக்கப்பட்டது