ஜானகி தேவி பஜாஜ் மேலாண்மை ஆய்வுகள் கல்வி நிறுவனம்
ஜானகி தேவி பஜாஜ் மேலாண்மை ஆய்வுகள் கல்வி நிறுவனம் (JDBIMS) என்பது இந்தியாவின்மகாராட்டிர மாநிலத்தின் மும்பை மாநகரத்தில் 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பெண்களுக்கான பிரத்யேக மேலாண்மை வணிகப் பள்ளியாகும். மும்பை திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி, மும்பையில் உள்ள நியூ மரைன் பகுதியில் உள்ள இப்பல்கலைக்கழக வளாகத்திலேயே தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கல்லூரி, ஜூஹு சாலையில் உள்ள சர் விடல்தாஸ் தாக்கர்சி வித்யா விகார் வளாகத்தில் இயங்கிவருகிறது. முதுகலை வணிக மேலாண்மையில் படிப்புகளை பயிற்றுவிப்பதோடு வணிகம் மற்றும் மேலாண்மை தொடர்பான பிற குறுகிய கால படிப்புகளையும் இதன் மாணவர்களுக்கு வழங்கிவருகிறது.
வகை | வணிக மேலாண்மை தனியார் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1997 |
சார்பு | திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகம் |
பணிப்பாளர் | முனைவர் மகேஷ் சீடல் |
அமைவிடம் | சர் விட்டல்தாஸ் தாக்கர்சி வித்யா விஹார்,ஜூஹு சாலை, சாண்டாக்ரூஸ் (மேற்கு) , , , 400049 , |
வளாகம் | நகர்ப்புறம் |
மொழி | ஆங்கிலம், இந்தி |
இணையதளம் | [url|https://www.jdbims.net/%7Cகல்லூரி இணையதளம்] |
படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில்
- முதுகலை கல்வி மேலாண்மை (MEM)
- முதுகலை வணிக நிர்வாகம் (MBA)
- முதுகலை வணிக மேலாண்மை ஆய்வுகள் (MMS)
ஆகிய முதுகலை பட்டங்கள் வணிக, கல்வி மேலாண்மை பிரிவிலும்[1]
- மேலாண்மை மேம்பாட்டு திட்டங்கள் (MDP) என்பதில் குறுகிய கால படிப்புகளையும்
- வணிக மேலாண்மை படிப்பில் முனைவர் ஆராய்ச்சி படிப்புகளையும் மாணவர்களுக்கு வழங்கிவருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "About SNDT Womens University, Mumbai". Archived from the original on 2014-09-22.