திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகம்
திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகம் (Shreemati Nathibai Damodar Thackersey Women's University) என்பது தி. ந. தா. தா. மகளிர் பல்கலைக்கழகம் (SNDT Women's University) எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மும்பை நகரத்தில் உள்ள ஒரு பெண்கள் பல்கலைக்கழகமாகும். இந்தப் பல்கலைக்கழக தலைமையகம் தெற்கு மும்பையில் உள்ள சர்ச் கேட்டில் உள்ளது. இதன் முதன்மை வளாகம் சர்ச்கேட்டில் உள்ளது. இங்கு இரண்டு வளாகங்கள், மும்பையின் சாந்தகுரூஸ் - ஜூகூ பகுதியிலும் மற்றொன்று புனேவிலும் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் மகாராட்டிரம், அசாம், உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், சூரத்து மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இணைவுப் பெற்ற கல்லூரிகளைக் கொண்டுள்ளது.[2] இதனை நிறுவியதில் தோண்டோ கேசவ் கார்வே முக்கிய பங்கு வகித்தார். கார்வே 1915-ல் ஜப்பான் பெண்கள் பல்கலைக்கழகத்தின் ஈர்க்கப்பட்டார்.
குறிக்கோள் | ' Sanskrita Stree Parashakti '(கல்வியறிவுடை பெண் எல்லையற்ற வலிமையின் ஆதாரம் (An enlightened woman is a source of Infinite strength)[1] |
---|---|
வகை | பொதுப் பல்கலைக்கழகம் |
நிறுவியது | 5, சூலை 1916 |
வேந்தர் | பகத் சிங் கோசுயாரி |
துணைவேந்தர் | உஜ்வாலா சாக்ரோதியோ |
மாவணவர்கள் | மகளிர் மட்டும் |
அமைவிடம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா
|
வளாகங்கள் | மும்பை, புனே |
அங்கீகாரம் | பல்கலைக்கழக மானியக்குழு |
இணையதளம் | sndt.ac.in பரணிடப்பட்டது 2014-11-13 at the வந்தவழி இயந்திரம் |
வரலாறு
தொகு1920-ல் இந்தப் பல்கலைக்கழகம் திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டது. விட்டல்தாசு தக்கர்சி இந்நேரத்தில் ₹1500000 தனது தாயார் திருமதி நதிபாய் தாமோதர் தக்கர்சேயின் நினைவாக வழங்கியதால், இப்பல்கலைக்கழகத்திற்கு தக்கர்சேயின் பெயர் இடப்பட்டது.[3] ஆனால் பணம் முழுமையாகச் செலுத்தப்படவில்லை.[4] இப்பல்கலைக்கழகத்தில் தற்பொழுது 70,000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இது சர்ச் கேட், சாந்தகுரூஸ் - ஜூகூ, புனே என மூன்று வளாகங்களைக் கொண்டுள்ளது.[5]
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
தொகு- அனிதா தோங்ரே, வடிவமைப்பாளர்
- மசாபா குப்தா, வடிவமைப்பாளர்
- நீதா லுல்லா, வடிவமைப்பாளர்
- ஜெய மேத்தா, குசராத்தி கவிஞர் மற்றும் விமர்சகர்[6]
- சித்ரா முட்கல், பிரபல இந்தி எழுத்தாளர்
- ராணி முகர்ஜி, இந்திய நடிகை[7]
- ஹீரா பதக், குசராத்தி கவிஞர் மற்றும் விமர்சகர்
- சுருதி சடோலிகர், இந்தியப் பாரம்பரிய இசைப் பாடகி
- சோனாக்சி சின்கா, இந்திய நடிகை[8]
- பாரதி வைசம்பாயன், இந்தியப் பாரம்பரிய இசைப் பாடகர்
- வாசுபகேன், குசராத்தி எழுத்தாளர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Motto of SNDT" பரணிடப்பட்டது 2022-03-03 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "Affiliated Colleges". SNDT University. Archived from the original on 1 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 July 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "History of SNDT". Archived from the original on 2020-12-06. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
- ↑ Dhondo Keshav Karve.
- ↑ "Campuses of SNDT". Archived from the original on 2021-06-17. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
- ↑ Brahmabhatt, Prasad (2010). અર્વાચીન ગુજરાતી સાહિત્યનો ઈતિહાસ - આધુનિક અને અનુઆધુનિક યુગ (in குஜராத்தி). Ahmedabad: Parshwa Publication. pp. 141–142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5108-247-7.
- ↑ Mukherjee, Haimantee. "Rani Mukerji won't marry an actor".
- ↑ "Just How educated are our Bollywood heroines?". Rediff.com. 18 January 2012. பார்க்கப்பட்ட நாள் 12 October 2017.