தெற்கு மும்பை

தெற்கு மும்பை (South Mumbai)[1][2] பெருநகரமும்பை மாநகராட்சியில் மும்பை நகர்புற மாவட்டத்தின் தெற்கில் அமைந்த பகுதியாகும். இது மும்பை மாநகரத்தின் வணிகம் மற்றும் சந்தைப் பகுதியாகும். இது தெற்கு மும்பையின் கொலாபா முதல் மாகிம் வரை விரிந்துள்ளது. இந்தியாவிலேயே தெற்கு மும்பையில் நிலத்தின் மதிப்பு மிகமிக அதிகமாகும். தெற்கு மும்பை மலபார் மலை, பிரீச் கேண்டி, கெம்ஸ் கார்னர், குப்பே பரேட், கும்பாலா மலைகளுக்கு பெயர் பெற்றது.

தெற்கு மும்பை
பழைய மும்பை / மும்பை நகர்புற மாவட்டம்
மும்பை நகர்புற பகுதி
இரவில் தெற்கு மும்பையின் காட்சி
அரபுக் கடலிருந்து தெற்கு மும்பையின் இரவு நேர காட்சி
வெளிர் மஞ்சள் நிறத்தில் தெற்கு மும்பை பகுதி
வெளிர் மஞ்சள் நிறத்தில் தெற்கு மும்பை பகுதி
தெற்கு மும்பை is located in Mumbai
தெற்கு மும்பை
தெற்கு மும்பை
தெற்கு மும்பை
தெற்கு மும்பை is located in மகாராட்டிரம்
தெற்கு மும்பை
தெற்கு மும்பை
தெற்கு மும்பை (மகாராட்டிரம்)
தெற்கு மும்பை is located in இந்தியா
தெற்கு மும்பை
தெற்கு மும்பை
தெற்கு மும்பை (இந்தியா)
ஆள்கூறுகள் (மலபார் மலை): 18°57′00″N 72°47′42″E / 18.95°N 72.795°E / 18.95; 72.795
நாடு இந்தியா இந்தியா
மாநிலம் மகாராட்டிரா
மாவட்டம் மும்பை நகரம்
நகரம்மும்பை
பெருநகரமும்பை மாநகராட்சியின் வார்டுகள்A, B, C, D, E,
FS, FN, GS, GN
அரசு
 • வகைஉள்ளாட்சி அமைப்பு
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்67.7 km2 (26.1 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்31,45,966
 • அடர்த்தி46,000/km2 (1,20,000/sq mi)
இனங்கள்மும்பைகாரர்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
இடது பக்கம் மலபார் மலையின் வான்பரப்புக் காட்சி மற்றும் வலது பக்கம் சௌபாத்தி கடற்கரை
தெற்கு மும்பையின் குடியிருப்பு பகுதிகள்

தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர், கேட்வே ஆப் இந்தியா, சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், மும்பை துறைமுகம், பல்லார்டு எஸ்டேட் ஆகிய புகழ்பெற்ற கட்டிடங்கள் தெற்கு மும்பையில் உள்ளது. தெற்கு மும்பை பெரிய கோடீஸ்வரர்கள் வாழும் பகுதியாகும். இந்தியாவின் பெரிய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் $1.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள புகழ்பெற்ற ஆன்டிலியா மாளிகை தெற்கு மும்பையில் உள்ளது. தெற்கு

புவியியல் படி, தெற்கு மும்பை சால்சேட் தீவின் தெற்கில் அமைந்துள்ளது. இதன் கிழக்கில் மும்பை துறைமுகமும், மேற்கில் அரபுக் கடலும் எல்லையாக உள்ளது. மும்பை கடற்கரை உலாச்சாலையும் இங்கு உள்ளது.

தெற்கு மும்பையில் பிரபலமான கதீட்ரல் மற்றும் ஜான் கோனான் பள்ளி, ஜெ. பி. பெட்டிட் மகளிர் உயர்நிலைப் பள்ளி, காம்பியன் பள்ளி, பம்பாய் பன்னாட்டுப் பள்ளி, புனித மேரி பள்ளி போன்ற கல்வி நிலையங்கள் உள்ளது. மேலும் தெற்கு மும்பையில் இந்திய கிரிக்கெட் கிளப், இராயல் வில்லிங்டன் விளையாட்டு கிளப், பாம்பே ஜிம்கானா மற்றும் பிரீச் கேண்டி மருத்துவமனை, மும்பை மருத்துவமனை, ஜஸ்லோக் மருத்துவமனை மற்றும் அர்க்கிசோந்தா மருத்துவமனைகள் உள்ளது.

தெற்கு மும்பையின் பகுதிகள் தொகு

முக்கியத்துவம் தொகு

தெற்கு மும்பை பகுதியில் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மும்பை பங்குச் சந்தை செயல்படுகிறது. தெற்கு மும்பை, இந்தியாவின் முக்கிய மைய வணிகப் பகுதி ஆகும். இப்பகுதியில், குறிப்பாக நார்மன் முனைப் பகுதியில் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் தலைமையகம் உள்ளது. தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர், கேட்வே ஆப் இந்தியா, சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், மும்பை துறைமுகம், பல்லார்டு எஸ்டேட் ஆகியவற்றின் புகழ்பெற்ற கட்டிடங்கள் தெற்கு மும்பையில் உள்ளது. மும்பை உயர் நீதிமன்றம், பெருநகரமும்பை மாநகராட்சி மற்றும் மத்திய ரயில்வேயின் தலைமையகம் தெற்கு மும்பையில் உள்ள்து. ஆசியாவின் மிகப்பெரிய சேரிப் பகுதியான தாராவி தெற்கு மும்பையில் உள்ளது.

ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை நிறுவனம், மும்பை செயிண்ட் சேவியர் கல்லூரி, அரசு சட்டக் கல்லூர், வில்சன் கல்லூரி, ஜெய்ஹிந்து கல்லூரி, சர் ஜாம்செட்ஜி - ஜீஜிபாய் குழும மருத்துவமனை, வான்கேடே அரங்கம், சௌபாத்தி கடற்கரை போன்றவைகள் தெற்கு மும்பையில் உள்ளது.

பழைய மும்பை தொகு

 
1909-இல் மும்பை

பழைய மும்பையானது மும்பையின் ஏழு தீவுகளைக் கொண்டது. பழைய மும்பை என்ற பெயர் 19-ஆம் நூற்றாண்டு முதல் 1980-ஆம் வரை புழக்கத்தில் இருந்தது.

தெற்கு மும்பையின் மக்கள் தொகை வளர்ச்சி
Census Pop.
197130,70,380
198132,85,0407.0%
199131,74,910-3.4%
200133,26,8404.8%
Est. 201131,45,966-5.4%
Source: MMRDA[3]

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_மும்பை&oldid=3811726" இருந்து மீள்விக்கப்பட்டது