மும்பை கடற்கரை உலாச்சாலை

கடற்கரை உலாச்சாலை (Marine Drive) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் மும்பை நகரத்தின் தென்கோடியில் நாரிமன் முனையில் அமைந்துள்ளது. அரபுக் கடலை ஒட்டிய இந்த 'C' வடிவ காங்கிரீட் உலாச்சாலை 3 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த கடற்கரை உலாச்சாலை, வடகோடியில் கிர்கோன் சௌபாத்தி மற்றும் தென்கோடியில் நாரிமன் முனையையும் இணைக்கிறது. இதன் வடகோடியில் மலபார் மலை உள்ளது. இந்த உலாச்சாலை மேற்கு - தென்மேற்கு வழியாகச் செல்கிறது. கடற்கரை உலாச்சாலையை இராணியின் கழுத்தணி என்று அழைப்பர். ஏனெனில், இரவு நேரத்தில் கடற்கரை உலாச்சாலையை உயரமான இடத்தில் இருந்து பார்க்கும் போது, தெரு விளக்குகள் வெளிச்சத்தில் முத்து சரம் போல காட்சியளிக்கும்.

மும்பை கடற்கரை உலாச்சாலை
Mumbai Marine Drive

இராணியின் கழுத்தணி
உலாச்சாலை
மும்பை நகரத்தின் தென்கோடியில் நாரிமன் முனையின் கடற்கரை உலாச்சாலை
மும்பை நகரத்தின் தென்கோடியில் நாரிமன் முனையின் கடற்கரை உலாச்சாலை
மும்பை கடற்கரை உலாச்சாலை Mumbai Marine Drive is located in Mumbai
மும்பை கடற்கரை உலாச்சாலை Mumbai Marine Drive
மும்பை கடற்கரை உலாச்சாலை
Mumbai Marine Drive
மும்பை நகரத்தில் கடற்கரை உலாச்சாலையின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°56′38″N 72°49′23″E / 18.944°N 72.823°E / 18.944; 72.823
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை மாவட்டம்
நகரம்மும்பை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்400002
மலைபார் மலையிலிருந்து கடற்கரை உலாச்சாலையின் காட்சி

இந்த கடற்கரை உலாச்சாலையின் அதிகாரப்பூர்வமான பெயர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை என்பதாகும். இக்கடற்கரை சாலையின் நெடுகில் இருபுறகளிலும் நெடுகிலும் ஈச்ச மரங்கள் காணப்படும். இதன் வடகோடியில் புகழ்பெற்ற சௌபாத்தி கடற்கரை உள்ளது. இச்சாலையில் பல உணவு விடுதிகள் உள்ளது. இப்பகுதியில் மகாராட்டிரா ஆளுநரின் மாளிகை அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Marine Drive, Mumbai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


  1. "Marine Drive turns 100, many more to come - Typical Indian". Typical Indian (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-12-21.