மும்பை மேற்கு புறநகர் பகுதிகள்
மும்பை மேற்கு புறநகர் பகுதிகள் (Western Suburbs) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மும்பை மேற்கு புறநகர் பகுதியில் அந்தேரி, பாந்த்ரா, போரிவலி, தகிசர், கோரேகாவ், ஜோகேஸ்வரி ஜூகூ, காந்திவலி, மலாடு, கர், சாண்டா குரூஸ், வில்லே பார்லே, ஆரோ பால் காலனி போன்ற பகுதிகளைக் கொண்டது.
மும்பை மேற்கு புறநகர்ப்பகுதிகள் | |
---|---|
குடியிருப்பு | |
பச்சை நிறத்தில் மும்பை மேற்கு புறநகர் பகுதிகள் | |
ஆள்கூறுகள் (வில்லே பார்லே): 19°06′N 72°50′E / 19.10°N 72.83°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை புறநகர் மாவட்டம் |
மாநகராட்சி | பெருநகரமும்பை மாநகராட்சி |
வார்டுகள் | HE, HW, KE, KW, PS, PN, RS, RC, RN |
பரப்பளவு | |
• மொத்தம் | 242.7 km2 (93.7 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 62,20,000 |
• அடர்த்தி | 26,000/km2 (66,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மும்பை மேற்கு புறநகர் பகுதி, சால்சேட் தீவின் மேற்கு முனையிலிருந்து பாந்த்ரா முதல் தானே மாவட்டத்தின் பாயந்தர் பகுதி வரை நீண்டுள்ளது. மும்பை மேற்கு பகுதிகளை, தானே மாவட்டத்தின் பாயந்தர் மற்றும் மித்தி ஆறு ஆகியவைகள் பிரிக்கிறது.
பெருநகரமும்பை மாநகராட்சியில் மும்பை மேற்கு பகுதிகள்
தொகுபெருநகரமும்பை மாநகராட்சியில் மும்பை மேற்கு பகுதிகள் HE, HW, KE, KW,
PS, PN, RS, RC, RN ஆகிய வார்டுகளில் அமைந்துள்ளது.
போக்குவரத்து
தொகுவானூர்தி நிலையம்
தொகுமேற்கு மும்பையின் அந்தேரிப் பகுதியில் சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.
இருப்புப் பாதை
தொகுபாந்த்ரா தொடருந்து நிலையம், போரிவலி தொடருந்து நிலையம், பாயந்தர் தொடருந்து நிலையம் மற்றும் கோரேகாவ் தொடருந்து நிலையங்கள் புறநகர் மின்சார இரயில் வசதிகள் கொண்டது.
சாலை
தொகுமேற்கு விரைவுச் சாலை பாயந்தர், மீரா ரோடு, போரிவலி பகுதிகளை இணைக்கிறது. பாந்திரா-வொர்லி கடற்பாலம் தெற்கு மும்பையுடன் இணைக்கிறது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 446 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மும்பை மேற்கு புறநகர் பகுதியின், மொத்த மக்கள் தொகை 93,56,962 ஆகும். இதன் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 21,000 வீதம் வாழ்கின்றனர்.
மும்பை மேற்கு புறநகர் பகுதிகள்: மக்கள் தொகை வளர்ச்சி | |||
---|---|---|---|
Census | Pop. | %± | |
1971 | 17,05,490 | ||
1981 | 28,58,170 | 67.6% | |
1991 | 39,47,990 | 38.1% | |
2001 | 50,95,680 | 29.1% | |
Est. 2011 | 93,56,962 | 83.6% | |
Source: MMRDA[1] |
இதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- "Population and Employment profile of Mumbai Metropolitan Region" (PDF). Mumbai Metropolitan Region Development Authority (MMRDA). Archived from the original (PDF) on 28 December 2009. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.