மகாலட்சுமி, மும்பை

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு இடம்

மகாலட்சுமி, மும்பை (Mahalaxmi, Mumbai) என்ற இடம் மும்பைக்குள் இருக்கும் மும்பைக்கு அடுத்துள்ள ஒரு பகுதியாகும். இதைத் தவிர, மும்பையில் உள்ள ஒரு புறநகர் தொடர்வண்டி நிலையத்தின் பெயராகவும் மகாலட்சுமி உள்ளது.

மகாலட்சுமி
Mahalaxmi
Countryஇந்தியா
Stateமகாராட்டிரம்
Districtமும்பை நகரம்
Metroமும்பை
Languages
 • Officialமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
400011[1]
இடக் குறியீடு022
வாகனப் பதிவுMH 01
Civic agencyபி.மு.கா
மகாலட்சுமி குதிரைப் பந்தையவெளி

வரலாறு

தொகு

மும்பையில் உள்ள மிகப் பிரபலமான கோயில்களில் ஒன்று மகாலட்சுமி கோயில் ஆகும்.1785 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோயில், ஓரண்பை வேலார்டு கட்டிடத்துடன் ஏதோவகையில் தொடர்பு கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. அங்கிருந்த கடல் அரிப்புத் தடுப்புச்சுவர் வெளிப்படையாக இரண்டு முறை காரணமேதுமில்லாமல் சரிந்து விழுந்தது. அதன் கட்டுமானப் பிரிவின் தலைமைப் பொறியாளர் பதேர் பிரபு தன் கனவில் மும்பையின் வோர்லிக்கு அருகில் கடலில் லட்சுமி சிலை ஒன்று இருப்பதைக் கண்டார். அதைத் தொடர்ந்து சிலை தேடி கண்டறியப்பட்டு அவ்விடத்தில் அதற்காக ஒரு கோயிலும் கட்டப்பட்டது. இதன்பின்னர், வேலார்டில், கடலரிப்புத் தடுப்புச் சுவர்கள் எந்த சிக்கலும் இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டன. தொடர்ந்து இப்பகுதியில் மகாலட்சுமி குதிரைப் பந்தய வெளி ஒன்றும் கட்டப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Pin code : Mahalaxmi, Mumbai". pincode.org.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாலட்சுமி,_மும்பை&oldid=3322238" இலிருந்து மீள்விக்கப்பட்டது